உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

-30

மறைமலையம் - 30

27-9-1903... அரங்கசாமி நாயகரவர்கள், அனவரத விநாயகம் பிள்ளையவர்கள் ஆகியோரோடு சிந்தாதிரிப் பேட்டை கூட்டத்துக்குச் சென்றேன்; ஆனால் விவாதத்தை நடத்துவதற்கு, கதிரைவேலுப் பிள்ளை வரவில்லை. அதனால்

நான் உரையாற்றினேன்.

4-10-1903..... சிந்தாதிரிப்பேட்டை சென்று ஒன்பது

மணிக்குத் திரும்பினேன்.

5-10-1903 மாலையில் திருவல்லிக்கேணி வெசுலியன் மிசன் உயர்நிலைப் பள்ளி சென்று உரையாற்றினேன்.

15-10-1903 (i) பேராசிரியர் சூலியன் வின்சன், பாரிசு (ii) ஜி.யு. போப், ஆக்சுபோர்டு (iii) டபிள்யூ. ஆர். பிரேசர், இலண்டன் ஆகியோர்க்கு 'முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை'யும் மடல் களும் விடுத்தேன்.

18-10-1903 வேணுகோபால சுவாமி மைய அரங்கத்தில் பெருங்கூட்டம் குழுமியிருந்தது; அருட்பாவைப் பற்றி நல்லுரை ஆற்றினேன். தோல்விக்கு அஞ்சி, கதிரைவேலுப் பிள்ளை வரவில்லை.

ஆற்றினேன்.தோல்விக்கு

6

26-10-1903 சென்ற 18ஆம் நாள் ஞாயிறன்று நடந்த கூட்டத்தைப் பற்றிச் ‘சுதேசமித்திரனு'க்குச் செய்தி விடுக்கப் பட்டது.

2-11-1903 இன்று மாலை சூரியநாராயண சாஸ்திரியவர்கள் மறைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் குறிக்கிறேன்.

3-11-1903 சாஸ்திரியவர்களின் மறைவை ஒட்டி உயர்நிலை வகுப்புகள் மூடப்பட்டன. இன்று முழுவதும் துயரத்துடன் இருந்தேன். 'இறப்பு' எனும் வடிவத்தில் இயற்கையின் பேராற்றலை உணர்ந்து, அந்தச் சிந்தனையிலேயே ஆழ்ந்தேன்.

1904 - 19051

4-5-1904 கல்லூரியில் எனக்குத் தலைமைப் பண்டிதர் பதவி கிடைத்தது ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/229&oldid=1592577" இலிருந்து மீள்விக்கப்பட்டது