உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

197

23-5-1904 இராமலிங்கம் அவர்களும் நானும் கடைசி மெயிலைப் பிடித்து மதுரை அடைந்தோம். தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் எம்மை அழைத்துப் போக வந்திருந்தார்... ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவரவர்களைக் காணச் சென்றோம்.

துரை

6-6-1904 மீண்டும் இராமநாதபுரம் வந்தோம். பாண்டித் சாமியவர்களைக் காணச் சென்றேன்.

இரா. இராகவையங்காரவர்களைக் கண்டேன்.

அங்கு

6-7-1904 ‘ஞானசாகரம்' ஒரு மாத விளம்பரத்துக்கென ‘சுதேசமித்திர’ னுக்கு மூன்றரை உரூபா கொடுத்தேன்.

13-7-1904 பேரா. சூலியன் வின்சனுக்கென ‘நன்னூல் விருத்தியுரை' வாங்கினேன்.

24-8-1904

ஈடுபட்டிருந் தேன்.

திருக்குறளாராய்ச்சி’

எழுதுவதில்

2-9-1904... இரவிவர்மா படங்கள் உரூ. 1-13 அணாவுக்கு வாங்கினேன்... பயனற்ற கல்லூரி வேலையில் வெறுப்பே ஏற்படுகின்றது.

16-9-1904 கதிரைவேலுப் பிள்ளையவர்கள்மீது கொண்டு வந்த அவதூறு வழக்கில் சான்று கூறுவதற்கு வழக்கு மன்றத் துக்குச் சென்றேன்.

17-9-1904...‘செந்தமிழ்' கிடைத்தது. ‘திருக்குறட் பெயர்க் காரணம்’ எனும் என் கட்டுரையின் பகுதி ஒன்று அதில் வெளிவந்திருந்தது.

20-10-1904 ‘ஞானசாகரம்' ஆறாவது இதழ் வெளி வந்தது. 28-1-1905 கடந்த சனிக்கிழமையன்று (21 ஆம் நாள்) 242, தம்பு செட்டித் தெரு மேல்மாடிக்குக் குடிபுகுந்தோம். 12-2-1905.... அட்டாவதானம் கலியாண சுந்தர முதலியார் 6 என்னைக் காண வந்தார்.

1905

1906

29-4-1905 Y.M.H.A. வில் கர்னல் ஆல்காட்டின் உரையைக் கேட்கச் சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/230&oldid=1592578" இலிருந்து மீள்விக்கப்பட்டது