உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் 30

-30 3-5-1905 (பாலகங்காதார திலகரின்) Arctic Home in the Vedas படிக்கத் தொடங்கினேன்.

5.5.1905 நாளை மாலை 5.30 மணிக்கு நடக்கவிருக்கும் 'மரக்கறியுண்போர் சங்க'த்தில் உரையாற்ற இணங்கினேன்.

13-5-1905 ஆரியர், தமிழர் ஆகியோரின் வரலாற்றைப் பற்றிய ஆங்கில நூல் பல படித்தேன். சுவாமி விவேகானந்தரின் ஞானயோகம்' வாங்கி இரண்டு உரை படித்தேன். அவை நுண்ணியனவாகவும் அருமையாகவும் இருந்தன.

14-5-1905 அட்டாவதானம் கலியாணசுந்தர முதலியார் கேட்டுக்கொண்டதற்கிணங்க மெய்கண்டார் வரலாற்றை வெளியிட்டேன். 'பழந்தமிழரும் ஆரியரும்' கட்டுரையைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

25-5-1905 (மதுரைத் தமிழ்ச் சங்க) இரண்டாவது கூட்டம் நடந்தது; கனகசபைப் பிள்ளை தலைமை தாங்கினார். மு. இராகவையங்கார் 'வேளிர்' பற்றிக் கட்டுரை படித்தார். ‘பழந் தமிழரும் ஆரியரும்' பற்றி நான் உரையாற்றினேன்.

28-5-1905 விடியற்காலை தூத்துக்குடி அடைந்தோம். 29-5-1905... சிதம்பரம் பிள்ளையவர்களின் இல்லத்தில் சுவாமி வள்ளிநாயகம் அவர்களுடன் இரவுணவு உண்டோம். 30-5-1905... பகலுணவும் இரவுணவும் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் வீட்டில்....

25-6-1905... திரு. இரத்தினசபாபதி, திரு. உருத்திர கோடி, திரு. ஞானரத்தினம் ஆகியோர் வீட்டுக்கு வந்தனர்; கடற்கரை சென்றோம். சென்னையில் தமிழ்ச்சங்கம் தொடங்குவது பற்றிக் கலந்து பேசினோம்.

1-9-1905 இன்று

ன்று நல்ல

நாள்

ஆகையால் 134,

செங்கழுநீர்ப் பிள்ளையார் கோவில் தெரு, மண்ணடி வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம்...

4-9-1905 திருவருட்பிரகாச சபைக்குச் சென்று தலைமை

யுரை ஆற்றினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/231&oldid=1592580" இலிருந்து மீள்விக்கப்பட்டது