உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

199

10-9-1905... சிவனடியார் திருக்கூட்ட அரங்குக்குச் சென்று 'சிவனடியார் சிறப்பு'க் குறித்து உரையாற்றினேன். அதன் முடிவில்/ கதிரைவேலுப் பிள்ளையின் ஏற்பாட்டில் ஒருவர் என்னைப் பற்றித் தவறாகப் பேசினார். கூட்டத்திலிருந்தோர் அவரைக் கண்டித்தனர். என் நிலையை விளக்கிப் பேசினேன்.

25-9-1905 புனித சூசைக் கல்லூரியின் மறைந்த தமிழ்ப் பண்டிதர் அமிர்தம் பிள்ளையவர்களின் ‘தமிழ் விடு தூது’க்கு ஆராய்ச்சி முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

30-9-1905 சென்னையில் ஒரு சைவசித்தாந்த சபையை ஏற்படுத்துவது குறித்து என் வீட்டில் ஒரு சிறு கூட்டம் நடத்தப்பட்டது.

17-10-1905 சுதேசிய இயக்கத்தைப் பற்றி நான் புனைந்த பாடல்களைப் பெற்றுக் கொள்ள இராமசேட அய்யரவர் களும் பிறரும் வந்தனர்; அவற்றின் எளிமையை வியந்தனர்.

18-10-1905 சுதேசிய இயக்கத்தைப் பற்றிய பாடல்கள் கணபதி கம்பெனியால் அச்சிடப்பெற்று மாலைக் கூட்டத்தில் தரப்பட்டன.

30-10-1905 Leadbeaterயின் clairvoyance படித்து முடித்தேன். Goatesயின் How to Mesmerise படிக்கத் தொடங்கினேன்.

27-11-1905... Myeru Human perrsonality and its Sur- vival after Death நூலை வாங்கினேன்.

2-12-1905 ஈசோபநிடதத்துக்குத் தமிழ் விளக்கவுரை எழுதி முடித்தேன்.

12-12-1905 தியோசபி அலுவலகத்திலிருந்து Dod's Six Lec- tures on Mesmerism வாங்கினேன்...

1906

25-1-1906.....1905 ஆம் ஆண்டுக்குரிய மாண்புமிகு கோகலேயின் காங்கிரஸ் மாநாட்டு அறிக்கையைப் படித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/232&oldid=1592581" இலிருந்து மீள்விக்கப்பட்டது