உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் - 30 -30

173-1906 காளிதாசரின் சாகுந்தல நாடகத்தின் இரண் டாவது அங்கத்தை மொழி பெயர்த்தேன்...

12-4-1906.... இவ்வாண்டில் நான் செய்த அருஞ்செயல் சைவசித்தாந்த மாநாட்டைக் கூட்டியதேயாகும்....

19-4-1906..... 'இந்தியாவின் பாதுகாவலர்’ சுரேந்திரநாத் பானர்ஜி அவர்களை வங்காள அரசு அநியாயமாகத் தண்டித் ததைக் கண்டிக்கும் வகையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் அச்சிட்டு விநியோகிப்பதற்கென சுரேந்திர நாதரைப் பற்றி ஆங்கிலத்தில் பாடல் (Sonnet) புனைந்தேன். ஆங்கில அரசாங்கம் தன்னிச்சைப்படி அதிகாரம் செய்து வருகிறது... 20-4-1906 அப் பாடலைப் பெற்றுக் கொள்வதற்கென இராமசேட அய்யரவர்கள் வந்தார்.

27-5-1906

முடித்தேன்.

பட்டினப்பாலை

விளக்கவுரை

எழுதி

29-5-1906....(மதுரைத் தமிழ்ச்) சங்க ஆண்டு கூட்டத்துக்குச் சென்றேன். கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய உ.வே. சாமிநாத ஐயரவர்கள் இரண்டு மணிநேரம் ஏதேதோ பேசினார்... 4.30 மணிக்குத் தொடங்கிய கூட்டம் 10 மணிக்கே முடிந்தது. ஒருவரையொருவர் புகழ்ந்துகொள்வது பொறுக்க முடியாத தாகவுள்ளது. இதேபோல் தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டில் சங்கம் மறைந்துவிடும்.

4-6-1906....திருஞானசம்பந்தரைப் பற்றி அரியதோர் உரையாற்றினேன்... பொறாமை மிக்க இருவர் என்னைப் பற்றித் தவறாகப் பேசினர். அவர்க்குத் தக்க விடை யிருத்தேன்...

4-7-1906... 14 அணாவுக்கு 24 சுதேசி மெழுகுவர்த்தி கொண்ட ஒரு கட்டு வாங்கினேன்.

1-8-1906 திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி முதல்வர்க்கு ஒரு விண்ணப்பம் விடுத்தேன்...

27-10-1906 Harry Gazeயின் How to live forever படித்து

வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/233&oldid=1592582" இலிருந்து மீள்விக்கப்பட்டது