உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

201

4-11-1906 Victor Segnoவின் How to live 100 years படித்து முடித்தேன்.

8-12-1906... நூல்கள் வாங்குவதற்கு நான் ஏராளமாகப் பணம் செலவழிப்பதால் என் மனைவி முகம் கொடுத்துப் பேசவில்லை. நான் என் செய்வது? புதிய நூல்கள் வாங்கு வதில் எனக்குள்ள வேட்கை அளப்பரிது!

22-12-1906....பிராணாயாமம் பற்றிய உரையை எழுதிக் கொண்டிருக்கிறேன். ...*

1907

27-1-1907 (தவத்திரு இராசானந்த சுவாமிகள்) எனக்கு நிட்டை அருளினார்.

5-2-1907 ... Randallஇன் Psychology எனும் அருமையான நூலைப் படித்து வருகிறேன்.

30-4-1907 ... விபின் சந்திர பாலர் (சென்னை) வந்தார். அவருடன் மாணவர் பலர் ஊர்வலமாகச் சென்றனர்.

1-5-1907...திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்று, ‘புதிய இயக்கத்’தைப் பற்றி பாபு விபின் சந்திரபாலர் ஆற்றிய உரையைக் கேட்டேன். அலைகளின் இரைச்சலோடு அவர் தம் வண்கலக் குரல் போட்டியிட்டது.ஏறத்தாழ 5,000 பேர் குழுமி இருந்தனர்.

2-5-1907... கல்கத்தா காங்கிரஸ் நடவடிக்கைகள் பற்றிய நூலை வாங்கினேன்.

3-5-1907 ... திருவல்லிக்கேணி கடற்கரை சென்று சுதேசி இயக்கத்தைப் பற்றி பாபு விபின் சந்திர பாலரின் அருமையான ஆங்கிலப் பொழிவைக் கேட்டேன். இரவு பத்து மணிக்குத் திரும்பினேன்.

21-6-1907 பேராசிரியர் மானின் (Mann) Central School of Psychology அஞ்சல்வழிக் கல்வியில் பயிலத் தொடங்கினேன்.

12-8-1907 சம்பந்த முதலியாரவர்களின் தலைமையில் கல்லூரித் தமிழ்ச் சங்கக் கூட்டம் நடந்தேறியது. கம்பனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/234&oldid=1592583" இலிருந்து மீள்விக்கப்பட்டது