உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் - 30

பற்றியும், கம்பராமாயணத்தைப் பற்றியும் கோபாலாசாரியார் பேசினார். வரம்பில்லாமல் புகழ்ந்தார். இப் புகழ் கம்பனுக்கு உரியதன்று...

1-9-1907 என் வகுப்புத் தோழன் பாலசுப்பிரமணியனுக்கு விவேகானந்தரின் இராச, பக்தி, கரும, யோக நூல்களையும், பாலரின் உரைகளடங்கிய நூலையும் படிக்கக் கொடுத்தேன்.

27-10-1907 ‘கிழக்கும் மேற்கும்' பற்றி எழுதினேன்.

27-11-1907 Herbert Spencer Principles of Psychol- ogy/ W. Morrisஇன் Earthly Paradise ஆகியன வாங்கினேன்... சிவஞான போதத்துக்கு விரிவான உரை எழுதுவதற்கென தத்துவ நூல்கள் பல வாங்கி வருகிறேன். தமிழில் ஒரு பெருங் காவியம் எழுதுவதற்கென, கவிதை-திறனாய்வு நூல்களை வாங்கிவருகிறேன்.

1-12-1907...திருமதி அன்னி பெசன்ட்டின் தலைமையுரை கேட்பதற்கென அடையாறு சன்றேன். 25 நிமிடம் தாமதமாகச் சென்றதால் 5 நிமிடம் மட்டுமே கேட்க முடிந்தது. பொழிவு நன்றாயில்லை என்று அறிந்தேன்.

5-12-1907 சிதம்பரத்தில சைவ சித்தாந்த மாநாட்டைக் க் கூட்டுவதற்கென ஈசன் அருளால் பெரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்...

12-12-1907 The Evolution of Cosmos எழுதினேன்.

14-12-1907 சைவ சித்தாந்த மாநாட்டுக்குத் தலைமை யேற்கத் தாம் இணங்குவதாக பாண்டித்துரை அவர்களிட மிருந்து தொலை வரி வந்தது.

1908

11-3-1908... இன்று நல்ல நாளாகையால் 68, அரண் மனைக்காரத் தெரு மேல்மாடி வீட்டுக்குக் குடிபெயர்ந் தோம்.

13-4-1908 அடிசனின் Vision of Marraton மொழி பெயர்க்கத் தொடங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/235&oldid=1592584" இலிருந்து மீள்விக்கப்பட்டது