உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

203

8-5-1908 அடிசனின் Vision of Marraton தமிழில் பெயர்த்து முடித்த பின்னர் அவர் எழுதிய Picture Gallery எனும் மற்றொரு கட்டுரையைப் பெயர்க்கத் தொடங்கினேன்.

19-5-1908... குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரையை எழுதிக்

கொண்டு வருகிறேன்.

25-6-1908 வங்காள மொழிப் பாடலான

மாதரத் தை’த் தமிழில் பெயர்த்தேன்.*

‘வந்தே

6-7-1908 அடுத்த திங்கள் இறுதியில் நான் தொடங்க விருக்கும் 'The Oriental Mystic Myna' எனும் ஆங்கில இதழுக்குக் கட்டுரைகள் அனுப்புமாறு என் நண்பர்களுக்கு மடல் விடுத்தேன்.

என் முயற்சி வெற்றி பெற இறைவன் அருளட்டும்! என் தாய்மொழி தமிழுக்கும், என் சமயத்துக்கும் தமிழ் மொழி வாயிலாகக் கடந்த பத்தாண்டுகளாக நான் ஆற்றி வந்த பணிகள், படிக்கும் தமிழ் மக்கள் இல்லாமையால் பயனற்றுப் போயின.

23-7-1908 இந்தியாவின் பெருந்தலைவர் பால கங்காதர திலகர் அரச நிந்தனை புரிந்தார் எனும் போலிக் குற்றச்சாட்டின் பேரில் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார் என்ற துயரச் செய்தி அறிந்தேன். இந்தப் பெரும் தேசபக்தர் நம்மை விட்டுப் பிரிவதை எண்ணித் துயருற்றோம். ஓ, பாரதத்தாயே! நின் மைந்தர் இத்துணை அல்லலுற வேண்டுமோ!

26-8-1908 இன்று பிற்பகல் இரத்தினசபாபதி முதலியாரவர் களுடன் காவல்துறை ஆணையாளர் அலுவலகம் ன் சென்று என் ஆங்கில இதழுக்கு அறிவிப்புச் செய்தேன்...

1-9-1908 விவேகானந்தர் அச்சகத்திலிருந்து Oriental Mys-

tic Myna 300 படிகள் பெற்று வந்தேன்.

27-9-1908 எனது ஆங்கில இதழுக்கென The Milk Sea Myth எழுதத் தொடங்கினேன்.

8-10-1908 ... என் அருமை நண்பர் தண்டலம் பாலசுந்தர முதலியார் ரங்கூனில் மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/236&oldid=1592585" இலிருந்து மீள்விக்கப்பட்டது