உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

-30

மறைமலையம் - 30

3-12-1908 The Universal Religion எனும் ஆங்கில உரையை எழுதத் தொடங்கினேன்.

1909

7-1-1909 டாக்டர் ஆனந்த கே. குமாரசாமிக்கு மடல் விடுத்தேன்.

29-3-1909... சம்பந்த முதலியாரவர்களைக் கண்டேன். சுதேச மொழிகளை (vernaculars) (பாடத்திட்டத்திலிருந்து) விலக்குவதைக் கண்டித்து ஒரு பெரிய பொதுக் கூட்டத்தைக் கூட்டுமாறு அவரைக் கேட்டேன்.

18-7-1909... பிற்பகல் அடையாறு சென்று டாக்டர் ஆனந்த குமாரசாமியைக் கண்டு உரையாடினேன்.

25-7-1909 ஆசிரியர் குழுவில் எனக்கு வேலை தர முடியுமா என்று வினவி இதழாசிரியர் இருவர்க்கு எழுதினேன்.

10-8-1909 ஈசனும் உமையுமே கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை இழந்துவிட்டேன்.கடவுளரிடம் வேண்டுவதன் மூலம் மாற்றப்பட முடியாத நிலைபேறுடைய விதி பேரண்டத் தில் உள்ளது. மேன்மைபெற்ற ஆன்மாக்களான கடவுளரால் மனிதர்க்கு ஏதேனும் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்ற வில்லை. அனைத்தும் நம் முயற்சிகளையே சார்ந்துள்ளன.

27-8-1909 ‘பகவத் கீதையும் சமூக முன்னேற்றமும்' எனும் பொருள்பற்றி வரும் ஞாயிறு, 29ஆம் நாள் பரங்கிமலை ஒப்புக்

சரசுவதி இலக்கியக் கழகத்தில் உரையாற்ற

கொண்டேன்.

29-12-1909 திருச்சியில் சைவ சித்தாந்த மாநாடு தொடங்கிற்று.

1910

14-1-1910 வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீலகண்ட பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். நீலகண்ட பாடியத்தின் ஒரே நல்ல தமிழ்ப் பெயர்ப்பு இதுவே. மொழிபெயர்ப்பாளர் செந்திநாத அய்யர்க்குத் தமிழ்ச் சைவர் கடப்பாடுடையர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/237&oldid=1592588" இலிருந்து மீள்விக்கப்பட்டது