உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

205

9-2-1910 தமிழ்த் தட்டச்சுப் பொறியை உருவாக்கியுள்ள ஜே.வி. சுந்தரம் அய்யர் அழைப்புக்கிணங்க அவர்தம் இல்லம் சென்றேன். அப் பொறியைக் கண்டேன். மனநிறைவளிக்கும் முறையில் இருந்தது. அவர் கேட்டுக் கொண்டபடி ஒரு நற்சான்று அளித்தேன்.

10-7-1910 சென்னைத் தமிழ்ச் சங்கச் செயற்குழுக் கூட்டத் துக்குச் சென்றேன்.

21-7-1910 என் மனைவியுடன் திருவல்லிக்கேணிக் கடற்கரை யிலுள்ள மீன் காட்சியகத்துக்குச் சென்றேன். இறைவனின் படைப்பிலுள்ள வியப்புகளை விளம்பல் அரிது!...

6-8-1910 சுவாமி விவேகானந்தரின் ‘கர்ம யோகம்' எனும் அருமையான நூலைப் படித்தேன். இரண்டொரு கருத்துக் களைத் தவிர விவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை யுருக்கும் தன்மையனவாய், சைவ சித்தாந்தக் கருத்துகளுடன் ஒத்துள்ளன.

16-9-1910 மாலையில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று பழந்தமிழர் நாகரிகம் பற்றிப் பேசினேன். 25-9-1910 பல்லாவரம் இருப்புப்பாதை அருகே வீடு கட்டுவதற்குரிய மனையைத் மனையைத் தேர்ந்தெடுக்க நானும் அண்ணாமலையும் ஞானசம்பந்தனும் திருநாவுக்கரசும் சென்றோம்.

30-10-1910.. விருதை சிவஞான யோகிகள் இல்லம்

வந்தார்.

19-11-1910... (கல்லூரி) வேலை அடுத்த ஆண்டுடன் முடிவதால், புதுச்சேரிக்குக் குடிபெயர்வது தோதுப்படுமா என்றறிய என் அன்னையையும், மனைவியையும் அங்கு அனுப்பி வைத்தேன்.

3-12-1910 பிற்பகல் பல்லாவரம் சென்று ரூ.90க்கு ஒரு மனை வாங்க ஏற்பாடு செய்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/238&oldid=1592589" இலிருந்து மீள்விக்கப்பட்டது