உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் - 30 1911

31-1-1911 மார்ச்சுத் திங்கள் 31 ஆம் நாளுடன் என் பணிக்காலம் முடியும் என்ற செய்தி அறிந்து திடுக்கிட்டேன். பல்கலைக்கழக விதிமுறைப்படி இவ்வாறு நடக்கும் என்று அறிவேனாயினும், துறவறம் பெறலாம் என்ற எண்ண முடையவனாக இருப்பினும் இச்செய்தி சிறிது கலக்கத் தைத் தந்தது.

18-2-1911 இன்று விடியற்காலை பிரஞ்சுக்காரன் ஒருவன் ஓட்டிய வானவூர்தியை நாங்கள் அனைவரும் கண்டோம். மனிதரின் இக்கண்டுபிடிப்பை எண்ணி வியந்தேன்.

15-3-1911...‘சிவஞான போத ஆராய்ச்சி'யை அச்சுக்குக்

கொடுத்தேன்.

22-4-1911... ‘சமரச சன்மார்க்க நிலையம்' ஏற்படுத்தினேன். 30-4-1911 பல்லாவர வீட்டுக்குக் குடிபெயரும் பொருட்டு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினேன்.

னேன்.

12-5-1911 ‘கோகிலாம்பாள் கடிதங்கள்’ எழுதத் தொடங்கி

30-5-1911 டவுடனின் ஷெல்லி வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்து வருகிறேன். ஷெல்லி அருமையான கவிஞன்; அவனுடை ய வாழ்க்கை என் வாழ்க்கையுடன் பெரும் பான்மை ஒத்து வருகின்றது.

8-6-1911 என் மகள் சிந்தாமணியின் திருமணம் ஈசன் அருளால் இன்று காலை 8:30 மணியிலிருந்து 10:30 வரை நடந்தேறியது...

25-6-1911 செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சென்று ஈசன் பரமேசுவரரை வழிபட்டோம். வ பண்ட ாரத்தின் கையிலிருந்து இரு கழுகுகள் உணவருந்துவதைக் கண்டோம்... அந்தப் பூசாரிகள் சொல்வது போல் அவை காசியிலிருந்து வரவில்லை. அருகிலிருக்கும் குன்றுகளிலிருந்தே வருகின்றன. அவை பழக்கப்படுத்தப்பட்டவை எண்ணுகிறேன்.

என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/239&oldid=1592591" இலிருந்து மீள்விக்கப்பட்டது