உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

207

5-8-1911 அவர் விரும்பினால் ‘சித்தாந்த தீபிகை’க்கு (Light of Truth) ஆசிரியப் பொறுப்பேற்பேன் என்று ஜே.எம். நல்லசாமிப் பிள்ளைக்குப் பதில் விடுத்தேன்.

27-8-1911...துறவிக்குரிய துவராடை புனைந்தேன்.

8-9-1911 சுவாமி உருத்திரகோடீசுவரரும் நானும் காவல் துறை ஆணையாளர் ராவ்சாகிபு சரவண பவானந்தம் பிள்ளை யவர்களைக் கண்டு நெடுநேரம் உரையாடினோம். இப்பண் பாளர் என்னோடு இனிமையாகப் பழகினார். இவர்க்குத் தமிழில் தேர்ந்த புலமையும் ஆர்வமும் உள்ளன. தம்முடைய அரிச்சந்திரன்’ நூலை அன்புடன் அளித்தார்.

3-10-1911 வருகிறேன்.

மலைபடுக

மலைபடுகடாம் ஆராய்ச்சியுரை எழுதி

7-12-1911 மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பாண்டித் துரையவர்கள் மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன்.

11-12-1911 சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தில்லியில் நடக்கவிருக்கும், இந்தியப் பேரரசர் ஜார்ஜின் முடிசூட்டு விழாவை வாழ்த்திப் பதிகம் புனைந்தேன்.

12-12-1911 பல்லாவரத்தில் முடிசூட்டு விழா ஊர்வலத்தில் கலந்து கொண்டேன்.

29-12-1911 சூளையில் சைவசித்தாந்த மாநாடு; முடிவு வரை கலந்து கொண்டேன். அசலாம்பிகை அம்மையார் என்னோடு அன்புடன் பேசினார். அவருடைய உரை நன்றாக இல்லை என்றாலும், அவரைப் போல் சாதனை புரிந்த பெண்கள் வெகு சிலரே ஆவர்.

1912

22-1-1912 வேலூர். என் தலைமையில் ஒரு சைவ சித்தாந்த சபை உள்ளூரில் தொடங்கப் பெற்றது.

1-2-1912 பிற்பகல் ஒரு மணியளவில் வடலூர் வந்தடைந் தேன்... இராமலிங்க அடிகள் கட்டிய பெருங் கோயிலைக் கண்டதும் மலைப்பும் வியப்பும் கலந்த உணர்வு ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/240&oldid=1592592" இலிருந்து மீள்விக்கப்பட்டது