உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

  • மறைமலையம் – 30

2-2-1912 இராமலிங்க அடிகள் சபையில் சன்மார்க்கம் பற்றிப் பேசினேன். அடிகள் ஏற்படுத்திய முறைகளை மாற்றி சடங்குகளை வேண்டுமென்றே சில தீகர்கள் தந் நலத்துக்காக நுழைத்துள்ளனர் என்று கடிந்து பேசினேன்.

29-2-1912 மூட்டைப்பூச்சி, கொசுத் தொல்லையினாலும், சாக்கடை நாற்றத்தினாலும் சென்னையில் நேற்றிரவு உறங்கவே இயலவில்லை.

26-3-1912 ‘விவேகபாநு'வில் என்னை மறைமுகமாகக் கண்டித்து எழுதிய ஒருவருக்கு மறுமொழியாகச் சாதிவேறு பாடுகளைச் சாடி, கட்டுரை எழுதி வருகிறேன். சாதிமுறையை அழித்து, மனிதரிடைய சமன்மை கொண்டுவரவேண்டும் என்பதே என் விழைவு. என் எளிய முயற்சிகட்கு ஈசன் அருளட்டும்!

3-4-1912 ‘போலிச் சைவரும் சாதி வேறுபாடும்’ எனும் கட்டுரை எழுதி முடித்தேன்.

2-6-1912 ‘The Elevating of Depressed Classes' எனும் ஆங்கிலப் பொழிவு எழுதினேன்.

20-7-1912 புனலூர்... காவல்துறையினர் என்னைக் கண் காணித்து வந்தனர். நான் சமயச் சொற்பொழிவாளன் மட்டுமே - காவலர். என்னைக் கண்காணித்தல் ம மடமை. பிரித்தானிய அரசு தொடர்ந்து ஆட்சிபுரிவதையே நான் விரும்புகிறேன்.

17-10-1912 பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் என்னைக் காண வந்தார். நற்றிணையை அவர்தம் உரையுடன் வெளியிடு வதற்கென, சென்னை நண்பர்களைக் கண்டேன்.

27-10-1912...கடிதத் தொடர்பு கொள்வதிலேயே பெரும் பகுதி நேரம் கழிந்து கொண்டிருக்கிறது.

1913

24-1-1913... மேட்டுக்குப்பம் சென்றேன். இராமலிங்க அடிகள் முன்னாளில் அமர்ந்த புனித அரங்குக்குச் சென்றதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/241&oldid=1592593" இலிருந்து மீள்விக்கப்பட்டது