உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

209

உளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகிற்று; என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன்.

9-2-1913 மகாஜன சபை அரங்கில் இன்று மாலை ‘திராவிட நாகரிகம்' பற்றிய எனது இரண்டாவது பொழிவு நிகழ்ந்தது.

3-3-1913 இலக்கணத்தில் தமக்குள்ள ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொள்வதற்கென, திரு. மணி. திருநாவுக்கரசு முற்பகல் வந்தார்.

7-3-1913 பூரியில் நடக்கவிருக்கும் அனைத்திந்திய சமய மாநாட்டுக்கு அதன் சார்பாக நான் செல்ல வேண்டுமென்று தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையிலிருந்து தொலைவரி வந்தது.

13-3-1913 பூரி மாநாட்டுக்கென

சாங்கியமும் சித்தாந்தமும்' எனும் பொழிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். 21-3-1913... கல்கத்தா மெயிலில் புறப்பட்டேன்.

30-3-1913...பூரி வந்தடைந்தேன்.

5-4-1913 கல்கத்தாவில் ... 'உலகெலாம்.....

எனும்

பெரியபுராணப் பாடலை ஆங்கிலத்தில் பெயர்த்தேன்.

16-4-1913 கல்கத்தாவில் ‘சாங்கியமும் சித்தாந்தமும்' எனும்

பொருள் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினேன்.

7-5-1913 கல்கத்தாவிலிருந்து புறப்பட்டேன்.

9-5-1913 காசிக்கு வந்தேன்.

11-7-1913 சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.

13-7-1913 'இந்தியன் ரிவியு' இதழுக்குக் கையொப்ப

மிட்டேன்.

19-7-1913 இராயப்பேட்டை சித்தாந்த சபையைச் சார்ந்த திரு. சச்சிதானந்தமும் திரு. (வி.) கலியாண சுந்தரமும் அவர்தம் தமையனும், திரு. நமசிவாயமும், திரு. கோவிந்த ராச முதலியாரும் என்னைக் காணவந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/242&oldid=1592594" இலிருந்து மீள்விக்கப்பட்டது