உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

-30

மறைமலையம் 30

20-7-1913 மயிலாப்பூர் இரானடே அரங்கில் எனது வடநாட்டுப் பயணத்தைப் பற்றிய கூட்டத்துக்கு இராயப் பேட்டை சங்கம் ஏற்பாடு செய்திருந்தது... அன்புள்ளம் கொண்ட இளஞ்சைவர் பண்டித கலியாணசுந்தரம் வீட்டில் இன்றிரவு தங்கினேன்.

25-7-1913 தமிழ் மூலிகைகளுக்கு ஆங்கில-இலத்தீன் பெயர்களை எழுதினேன்.

6-8-1913 நாகை சொ. தண்ட பாணி என்னைக் காண

வந்தார்.

22-9-1913 இராயப்பேட்டை திருவாளர் திரு.வி.கலியாண சுந்தர முதலியார் என்னைக் காண வந்தார்.

17-12-1913 ‘போட் மெயிலி'ல் இன்று மாலை தூத்துக் குடிக்குப் புறப்பட்டேன். திருவாளர் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் உடன் வருகிறார்.

20-12-1913 தூத்துக்குடி சைவ மாநாடு.

1914

29-3-1914 வடமொழியில் உபநிடதங்களைக் கற்கத் தொடங்கினேன். இசாவசியத்தைத் தமிழில் பெயர்க்கத் தொடங்கினேன்.

30-3-1914 இரவில் திருவாளர் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் வந்தார்; நெடுநேரம் உரையாடினோம்.

16-4-1914 பவணந்தி முனிவரைப் பற்றிய என் கருத்துரை 'வைசியமித்திர'னில் வெளிவந்தது.

4-5-1914 பொள்ளாச்சியில் தாசில்தார் நெல்லையப்ப பிள்ளை தம் இல்லத்துக்கு அழைத்தார்; இணங்கினேன். இவர்க்குச் சைவ சித்தாந்தம் தெரியும் என்றாலும் பிரும்ம ஞான சபையில் (Theosophical Society) அதிக ஆர்வம் கொண்டு, வீணாக அதனை நம்பி வருகிறார்.

16-5-1914.... 24 ஆண்டுக்கு முன்னர் நான் தொடங்கிய (நாகை) இந்துமதாபிமான சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்துக்குத் தலைமையேற்க இணங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/243&oldid=1592595" இலிருந்து மீள்விக்கப்பட்டது