உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

211

23-6-1914 வேதாந்த சூத்திரங்கட்கு நீலகண்டர், சங்கரர், இராமாநுசர், மாதவர், பாலதேவர் ஆகியோரின் உரைகளை ஒப்புநோக்கி எழுதி வருகிறேன்.

7-8-1914 அவர் மீது அவதூறு செய்தேன் என்று சோம் சுந்தர பாரதியார் வாயிலாக மகிபாலன்பட்டி கதிரேசன் செட்டியார் பதிவு அஞ்சலில் அறிவிப்பு அனுப்பியிருந்தார். உண்மையில் அவர்தாம் என்னை அவதூறு செய்தார். ஈசன் அவரைத் தண்டிக் கட்டும் என்று விட்டுத் தள்ளினேன். அவரை

அமைதிப் படுத்துமாறு என் முன்னாள் மாணவர்

பாரதியார்க்கு மடல் விடுத்தேன்.

17-8-1914 கதிரேசன் செட்டியாரிடம் மன்னிப்புக் கேட்கு மாறு ச.சோ. பாரதியார் மடல் எழுதினார். இஃது அநியாய மென்பதால் நான் ஒப்புக் கொள்ளவில்லை.

19-8-1914 கோட்டை மன்னார் சித்தி விநாயகப்பதிகம் எழுதி முடித்தேன்.

23-9-1914 நேற்று ‘எம்டன்' கப்பல் சென்னை நகரைத் தாக்கிற்று என்றறிந்தேன்.

24-9-1914 தூத்துக்குடி விரைவு வண்டியில் மதுரை யிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டேன். உடன் பயணம் செய் பவர் ஒருவரிடமிருந்து Madras Times நாளேடு வாங்கி ஜெர்மனிய கப்பல் ‘எம்டன்' சென்னையை வெடிகுண்டு காண்டு தாக்கியதைப் பற்றிய செய்திகளைப் படித்தேன். அமைதியான சென்னைக்குத் தொல்லை தால் ல விளைக்கும்

ஜெர்மனியர் எத்துணைக் கொடியர்; காட்டுமிராண்டிகள்.

12-10-1914 பெல்ஜிய நாட்டின் கோட்டை எனத் தகும் ஆண்ட்வர்ப்பை ஜெர்மனியர் கொடூரமாகத் தாக்கி அதனைக் கைப்பற்றினர் எனும் துயரச் செய்தி அறிந்தேன். போரால் உண்டாகும் தீமைகளை ஈசன் என்றே தீர்ப்பான்.?

1915

3-1-1915 கந்தசாமிக் கவிராயர் என் மேல் கொண்டு வந்த L மானநட்ட வழக்கு தொடர்பாகச் சோமசுந்தரம் பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/244&oldid=1592598" இலிருந்து மீள்விக்கப்பட்டது