உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

-30

மறைமலையம் - 30

யவர்களுடன் கலந்து பேச திருநெல்வேலி வந்தேன்... தேவாரப் பாடல்களை இசைத்தட்டில் கேட்டு மகிழ்ந்தேன்.

7-1-1915 விருதுப்பட்டி.... இவ்வூர் நாடார் சமூகத்தினர் வளர்ந்து வருகின்றனர். கல்வியில் அவர்கள் காட்டும் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களுக்கு வேளாளர் உரிய மதிப்பு அளிப்பதில்லை. இது வருத்தக்குரியது.

15-1-1915 11ஆம் நாள் காலை 7.30 மணிக்குச் சோழ வந்தான் அ. சண்முகம் பிள்ளை (அரசஞ் சண்முகனார்) மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன். தமிழுலகம் பெரும் புலவரை இழந்துவிட்டது; அதனை ஈடு செய்தல் அரிது.

21-3-1915 சைவ சமய மாட்சி மெய்ப்புப் பார்த்தேன்.

31-8-1915... கந்தசாமிக் கவிராயரால் என்மேல் கொண்டு வரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை தூத்துக்குடி முன்சீபு வழக்கு மன்றத்தில் தொடங்கிற்று.

30-9-1915...எனக்கு

உதவிபுரிவதாக

வாக்களித்துக்

காவல்துறைத் துணை ஆணையாளர் ச.பவானந்தம் பிள்ளை மடல் விடுத்தார்.

4-10-1915 சென்னைக்குச் சென்று திரு. சரவண பவானந்தம் பிள்ளையவர்களைக் கண்டேன். தாம் பதிப்பிக்கவிருக்கும் தொல்காப்பியப் பொருளதிகாரம், இறையனார் அகப்பொருள் ஆகியவற்றுக்கு மெய்ப்பு பார்ப்பதற்கு இம்மாதம் ரூ. 30-உம் அடுத்த மாதம் ரூ, 40உம் தர ஒப்புக் கொண்டார்.

13-11-1915... கந்தசாமிக் கவிராயரும் அவர்தம் வக்கீல் சோ.பாரதியாரும் சாட்சியங்களுடன் வந்தனர். மகாம கோபாத்யாயர் உ. வே. சாமிநாத அய்யரும், மு. இராசு வையங்காரும் எனக்கெதிராகப் பல சொன்னார்கள்....

18-11-1915 என் வக்கீல் விசுவநாத சாஸ்திரி மு. இராக வையங்காரைக் குறுக்குக் கேள்விகள் கேட்டார். வக்கீலின் திறமையைக் கண்ட உ. வே. சாமிநாத அய்யர் சமரசம் செய்ய முன்வந்தார்... சமரசம் ஆயிற்று.

26-12-1915... ரேனால்டின் அருமையான புதினம் Leila -வை குமுதவல்லி என்னும் தமிழ்ப் புதினமாக மொழியாக்கம் செய்து வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/245&oldid=1592599" இலிருந்து மீள்விக்கப்பட்டது