உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

1916

213

2-1-1916 தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் திரு.வேதியப்பிள்ளையுடன் என்னைக் காண விரும்புவதாகத் திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அஞ்சலட்டை விடுத்தார். வரும் திங்கள் அல்லது புதன் கிழமையில் என்னைச் சந்திக்கலாம் என்று விடையிறுத்தேன்.

5-1-1916 திரு.வ.உ. சிதம்பரம் பிள்ளையும், திரு. வேதியப் பிள்ளையும் என்னைக் காண வந்தனர். மே திங்களில் தென்னாப் பிரிக்காவில் நடக்கவிருக்கும் இந்து மாநாட்டுக்கு என்னைத் தலைமையேற்குமாறு திரு. வேதியப் பிள்ளை வேண்டினார். அரைமனத்துடன் ஒப்புக் கொண்டேன்.

19-1-1916 என் மகள் நீலாம்பாளின் திருமணம் தொடர்பாக வ. திருவரங்கம் அவர்கட்கு மடல் விடுத்தேன்...

24-1-1916...இலக்கியம், தத்துவம் முதலானவற்றைப் பற்றித் திரு. ச.பவானந்தம் பிள்ளையுடன் நெடுநேரம் உரையாடினேன். 9-3-1916 ச. பவானந்தம் பிள்ளையவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் பதிப்பிக்கும் இறையனார் அகப்பொருளுரைக்கு ஆங்கில முன்னுரை எழுதி வருகிறேன்....

26-3-1916... பண்டிதை கிருட்டிணவேணி அம்மாளும், அவர்தம் பெற்றோரும் ஆசிரியரும் என்னைக் காண வந்தனர்.

29-3-1916...இராயப்பேட்டை திருவாளர் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் தம்முடைய தமிழ்ப் புலமைக்குச் சான்றிதழ் விரைவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதி விடுத்தேன்... தமிழ்ப் பண்டிதர் வேலைக்கு முயன்று வருகின்றார்...

22-4-1916 ... பண்டித சவரிராயப் பிள்ளையவர்களிட மிருந்து Tamilian Antiquary இதழ்கள் சில வந்தன.... அச்சகம் ஒன்று தொடங்குவது குறித்துத் திருவாளர் திரு. வி. உலகநாத முதலியாரவர்களுடன்* கலந்துரையாடினேன்: எல்லா வகை யான உதவியும் செய்வதாக வாக்களித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/246&oldid=1592600" இலிருந்து மீள்விக்கப்பட்டது