உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் - 30

30-4-1916 ‘பயாஸ்கோப்' பார்ப்பதற்கென என் பிள்ளை களையும் என்னையும் தண்டபாணி அழைத்துச் சென்றார். மாலை 6.15க்குத் தொடங்கிய காட்சி 9.00 வரை தொடர்ந்தது

5-8-1916 பிற்பகல் திருவாளர் திரு.வி. கலியாண சுந்தர முதலியாரும், திரு. நடேச முதலியாரும் வந்தனர்... தம் பெண் மகவு இறந்துவிட்டதென்று திரு.வி.க. கூறினார்; மனம் வருந்தினோம்.

6-8-1916 இராயப்பேட்டை

சென்று திருவாளர்

திரு. வி. கலியாணசுந்தர முதலியாரின் மனைவிக்கு ஆறுதல் கூறினோம்...

21-8-1916 தமிழ் மொழியையும் சமயத்தையும் பரப்பு வதற்குச் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிப் பவானந்தம் பிள்ளையவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன்...

....

30-8-1916 மகாபாரதப் போர் நடந்த காலத்தை அறுதியிட்டுக் கூறுவதற்கெனப் பல நூல்களைப் படித்து வருகிறேன். பாலகங்காதர திலகர் தம்முடைய ‘Article Home in the Vedas' நூலில் குறிப்பிடும் காலமே பொருத்தமானது என்றெனக்குத் தோன்றுகிறது...

1917

17-1-1917.... திரு. சச்சிதானந்தம் பிள்ளை வந்தார். எனது சிவஞானபோத ஆராய்ச்சியுரையை ஆங்கிலத்தில் பெயர்த்துத்

தர ஒப்புக்கொண்டார்.

28-2-1917... பாளையங்கோட்டை .இளைஞர் சிலர் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். பாளையங் கோட்டை சிவன் கோயிலில் நான் பேசுவேன் என்று துண்டறிக் கைகள் பரப்பப்படுகின்றன. என் அருமை வ. திருவரங்கத்தின் இளவல் வ. சுப்பையா இதில் முன்னிற்கின்றார்...

2-3-1917 வ. சுப்பையாவின் அழைப்புக்கிணங்க அவர் தம் இல்லம் போந்து உணவருந்தினேன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/247&oldid=1592603" இலிருந்து மீள்விக்கப்பட்டது