உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

215

17-3-1917 மதுரை... அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரிய ராக இருக்கும் என் மாணவர் திரு. சோமசுந்தரம் பிள்ளை வந்தார். நேற்று நான் ஆற்றிய உரையைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் எழுதி, பார்ப்பனரல்லாதாரின் இதழான ஜஸ்டிசு’க்கு அனுப்பி வைத்தார்....

4-4-1917.... தம் மாமனார் ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசை பற்றிய நூலைக் குறித்து என் கருத்தை அறிய தஞ்சை ஞான சிகாமணி வந்தார். தமிழில் என் கருத்தை எழுதித் தந்தேன்.

30-4-1917 ‘உடன்பிறந்தார் ஒற்றுமை' எனும் துண்டறிக் கையை எழுதி முடித்து அச்சுக்குக் கொடுத்தேன்.

5-5-1917... போர் காரணமாக நூல்களின் விலை மிகுந்து

விட்டது.

23-5-1917 கொழும்பு வந்தடைந்தேன்.... கொழும்பு சமரச சன்மார்க்க சங்கத்தினரும், என்னருமை வ. திருவரங்கமும் அன்புடன் வரவேற்றனர்...

25-5-1917... யாழ் தமிழர் பலர் என்னைக் காண வந்தனர். அவர்களுட் சிலர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் என் மாணவராக இருந்தோர் ஆவர்....

3-6-1917... யாழ்ப்பாணத் தமிழ்ப் பண்டிதர்கள் சிலர், பொறாமை காரணமாக என்மேல் மாசு கற்பிக்க முயல் கின்றனர்; மனிதரின் பொதுநலம் கருதாமல் தந்நலம் மிக்கோராகவும் குறுகிய மனப்பான்மையினராகவும் உள்ளனர். பை க்காலச் சிற்றிலக்கியத்தில் மட்டுமே இவர்கட்குப் புலமை உண்டு.

21-6-1917 எனது ‘பெரியபுராண உரை விளம்பர’த்துக்கு வந்த மறுப்பைக் கண்டித்து நான் சொல்லியவற்றை திரு. கனகராயர் எழுதிக் கொண்டார்...

10-7-1917 திரு. ஜெயதிலகா பௌத்த கோயில் சிலவற்றுக்கு என்னை அழைத்துச் சென்றார். பாலி, வடமொழிகளில் மாணவர் சிலர் படித்துக்கொண்டிருந்தனர். மலைப்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/248&oldid=1592604" இலிருந்து மீள்விக்கப்பட்டது