உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

-30

மறைமலையம் - 30

உண்டாக்கும் அழகிய பௌத்த சிலைகள் அங்கிருந்தன. சுவரோ வியங்கள் சிறப்பாக இருந்தன. மன அமைதி தரும் சூழல் நிலவியது. இத்தகைய கோயில்கள் சைவர்க்கும் வேண்டும் என்பதென் விழைவு,,,

14-7-1917.... சிவஞானபோதத்தின் தோற்றம் பற்றி ஆங்கிலத்தில் எழுதி முடித்தேன். தம் பெயரில் வெளியிடுவதற் கெனத் திரு. கனகராயர் அதனைப் படியெடுத்துச் சென்றார்.

5-9-1917 இசைத் தமிழைப் பற்றிய தமது பெருநூலை இராவ்சாகிபு ஆபிரகாம் பண்டிதர் அனுப்பி வைத்தார்...

13-9-1917... தமிழ்ப் பார்ப்பனரல்லாதாரின் நலனைக் காக்கும் பொருட்டுப் புதிதாகத் தொடங்கப் பெற்றிருக்கும் 'திராவிடன்' இதழின் நேற்றைய பதிப்பில் 'சிறுதேவதைகட்கு உயிர்ப் பலியிடலாமா எனும் என் கட்டுரை வெளிவந்தது.

6

14-9-1917 கொழும்புச் சிறையில் இருக்கும் சங்கர நாராயணப் பிள்ளை என்பாரின் உருக்கமான வேண்டுதலுக் கிணங்க ஞான சாகரம்’ ஏழாம் தொகுதியை இலவசமாக பதிவஞ்சலில் விடுத்தேன். இறைவன் திருவருளால் என் எழுத்துக்களை அம் மனிதன் படித்து, சமுதாயத்துக்கு பயன் படும் வகையில் திருந்தட்டும்...

25-9-1917... திராவிடனின் நேற்றைய இதழில் என் ‘உடன் பிறந்தார் ஒற்றுமை' வெளிவந்தது...

14-11-1917...துணை ஆட்சித்தலைவர் (Deputy Collector) கேட்டுக் கொண்டபடி இன்று பிற்பகல் 'போர் நிதிய’க் கூட்டத்தில் கலந்துகொண்டு, அரசாங்கத்துக்கு நாமனை வரும் உதவ வேண்டியதன் தேவையை வலியுறுத்தி

பேசினேன்.

21-11-1917... என் மாணவர் திரு. வையாபுரிப் பிள்ளை பல சுவடிகளுடன் ஒப்புநோக்கித் தம் கலித்தொகை நூலில் செய்த திருத்தங்களை என் படியிலும் குறித்துக் கொண்டேன்.

23-11-1917... திரு. வையாபுரிப் பிள்ளையின் 'கலித் தொகை’யைத் திருநெல்வேலி சி. வீரவாகு பிள்ளைக்குப் பதிவு நூலஞ்சலில் விடுத்தேன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/249&oldid=1592605" இலிருந்து மீள்விக்கப்பட்டது