உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

1918

217

10-1-1918... அரசாங்கத்துக்கு இலங்கையாரின் விண்ணப் பத்தை மொழிபெயர்த்து முடித்தேன். எளிய, அழகிய, தூய்மையான தமிழில் அதனை அமைக்கப் பெருமுயற்சி எடுத்துள்ளேன். இனிய, மிகத் தூய்மையான தமிழில் எழுதுவது எனக்குப் பெரும் இன்பத்தை அளிக்கின்றது.

17-1-1918... அருள்திரு கலியாணசுந்தர யதீந்தரர் என்னைக் காண வந்தார்.

18-1-1918.... ஞானசாகரம்’ எட்டாம் தொகுதிக்குத் கையொப்பதாரரின் புதிய பட்டியலை அணியம் செய்தேன்.

இன்றுவரை 150 பேர் மட்டுமே கையொப்பக் கட்டணம் சலுத்தியுள்ளனர். சைவ சித்தாந்தத்தையும் தமிழ் மொழி யையும் பரப்புவதற்கென ஓராயிரம் கையொப்பதாரரை யேனும் ஈசன் அருளட்டும்.

12-3-1918... தமிழைச் செம்மொழியாக (Classical Lan- guage) ஏற்றுக் கொள்ளல் வேண்டும் என்று அரசாங் கத்துக்கு ண்ணப்பம் விடுப்பதற்கென பச்சையப்பன் கல்லூரி யில் 15- ஆம் நாள் நடக்கவிருக்கும் கூட்டத்தில் என்னை யாற்றுமாறு திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்..ஏ., எம்.எல். வேண்டினார்.

உரை

17-3-1918 சென்னை நகரம் மிக மோசமானதாக ஆகி விட்டது. கொசுக்கடியும், சாக்கடை நாற்றமும் வெள்ளிக் கிழமையன்று என்னை உறங்கவிடவில்லை...

20-3-1918

வியாபாரக்

கூட்டுறவு’

எனும்

துண்டறிக்கையை எழுதத் தொடங்கினேன்...

2

3-4-1918... கடந்த 3'/, ஆண்டாக ஐரோப்பாவில் நடந்து வரும் பேரழிவு மிக்க போர் சென்ற பத்து நாளில் மேலும் தீவிர மடைந்துள்ளது என்று அறிந்தேன். கிறித்துவின் சமயம் முழுத் தோல்வியடைந்துள்ளது!

18-4-1918.... ‘தமிழ்த்தாய்’ எனும் துண்டறிக்கை எழுதி

முடித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/250&oldid=1592606" இலிருந்து மீள்விக்கப்பட்டது