உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

...

மறைமலையம் லயம் - 30

20-4-1918 பிற்பகலில் திரு. சேதுப் பிள்ளை என்னைக் காண வந்தார். ணையமுடியாத வகையில் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்திருக்கும் தமிழ் மக்களுக்குப் புத்துயிர் அளிப்பது எங்ஙனம் என்பது பற்றி நெடுநேரம் உரையாடினோம்...

31-7-1918... தம்மைக் காண வருமாறு திரு ஆபிரகாம் பண்டிதர் அறிவித்தார். அவர் ஏன் என்னை வந்து சந்திக்கக் கூடாது? அவர் செல்வராயிருக்கலாம்; நான் அறிவுச் செல்வம் மிகவுடையேன். எனவே அவரைச் சென்று காண மறுத்தேன்.... 24-8-1918 ... பலர் என்னைக் காண வந்தனர். சாதி வேற்றுமை பாராட்டாமல், கீழ்நிலை மக்களுக்கும் கல்வி புகட்டி, அவர்களை மேல் சாதியினர் எனும் நிலைக்குக் கொண்டுவர வேண்டியதன் தேவை, முதன்மை ஆகியனபற்றி நெடுநேரம் பேசினேன்.

28-8-1918 (குலசேகரப்பட்டினம்)... என் முன்னாள் மாணவர் திரு. அறம்வளர்த்த நாத பிள்ளையின் மேற்பார்வையில் நடக்கும் இடைநிலைப் பள்ளிக்குச் சென்றேன். பிள்ளைகட்குக் கற்பிக்கும் முறை பாராட்டத் தக்கதாக உள்ளது...

2-9-1918... தமிழைச் செம்மொழியாக ஏற்க வேண்டும் என்ற சைவ மாநாட்டுத் தீர்மானத்துக்குக் கையொப்பமிட்டு சென்னையின் மேதகு ஆளுநர்க்கு அனுப்பி வைத்தேன்.

QpvD'Rosalind

3-9-1918... தேவகலைஞன் ஷெல்லியின் ‘Rosalind and Helen' எனும் துயரக் கவிதையைப் படித்து முடித்தேன். அஃது என் மனத்தைத் தொட்டது; கவிஞனின் உணர்வுகள் என் உள்ளத்திலும் தோன்றின.எனக்கு ஏற்பட்டாற் போன்ற அதே துயர உணர்வுகளை ஷெல்லியும் வெளியிட்டான் போலும். என் அநுபவங்களை விவரித்து இத்தகைய பாடல் ஒன்று எழுத எண்ணியுள்ளேன்.

6-9-1918 குலசேகரப்பட்டினம். புறாக்களும், கிளிகளும், குயில்களும், சப்பாத்திக் கள்ளிச் செடிகளும் பனை மரங்களும் ஏராளமாக உள்ளன. நகரம் முழுவதும் கடற்கரை மணல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/251&oldid=1592607" இலிருந்து மீள்விக்கப்பட்டது