உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

219

பரந்துள்ளது.ஒரு காலத்தில் இந்நகரம் கடலடியில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

26-9-1918 பாளையங்கோட்டை திராவிட இளைஞர் கழகத்தில் ‘பழந்தமிழர் நாகரிகம்' பற்றிப் பேசினேன்....

4-10-1918 என் மூத்த மகள் சிந்தாமணி மகப்பேற்றுக் காலத்தில் மறைந்தாள்.

6-10-1918 எங்கும் கடுமையான பஞ்சம் நிலவுகிறது. புதுவகையான காய்ச்சல் கண்டு பலர் இறந்து வருகின்றனர்; மனித இனத்தை எம்பெருமான் காக்க!

28-10-1918 எங்கும் உணவுப் பற்றாக் குறையாக உள்ளது; இப் பகுதியில் மழையே இல்லை; காய்ச்சல் பலரைக் கொண்டு செல்கின்றது.

29-10-1918 திருநெல்வேலி சைவர்கள் மிக நல்லவர்கள். தமிழ், சித்தாந்த அறிஞர்களிடம் அவர்களுக்கு இயல்பாகவே மதிப்பு இருக்கிறது.

29-12-1918 அட்டாவதானம் கலியாணசுந்தர யதீந்தரர் நேற்றிரவு மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன்.

1919

27-1-1919 இறைவன் அருளால் ரேனால்டின் புகழ் பெற்ற ஆங்கிலப் புதினம் Leilaவின் இரண்டாம் பகுதியை மொழி பெயர்த்து முடித்தேன். இது கடினமான வேலையாக இருந்த போதும் என் அருமைத் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் முகமாக இவ்வுயரிய நூலைப் பெயர்த்தேன். இந்நூலை முழுமையாகப் பெயர்க்க வேண்டும் என்ற அவா எனக்குள்ளது.

29-1-1919 கொழும்பு சர்.பி. அருணாசலம், வோர்ட்சு வர்த்தின் Education of Nature எனும் கவிதையைத் தமிழில் பெயர்த்து, அதனைத் திருத்தித் தருமாறு எனக்கு விடுத் திருந்தார். மொழி பெயர்ப்பு நன்றாக இல்லாமை கண்டு நானே அதனை மீண்டும் பெயர்த்து அவர்க்கு அனுப்பினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/252&oldid=1592609" இலிருந்து மீள்விக்கப்பட்டது