உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் - 30

28-2-1919 மூன்றாம் பதிப்புக்குரிய முறையில் எனது முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையைத் திருத்தத் தொடங்

கினேன்.

3-3-1919 குன்னூர் சிவத்யானந்தரிடமிருந்து Social Re- form Advocate இரண்டாம் தொகுதி வரப்பெற்றேன். நடைமுறை சமூகச் சீர்திருத்தம் பற்றிய அவர் கட்டுரையைப் படித்தேன்; அவர் தம் கருத்துகள் எனக்கு ஏற்புடையனவாக இருக்கக் கண்டேன். சைவர், அசைவர் என்ற பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் கூடா என்று நானும் எண்ணுகிறேன்; மரக்கறி உண்போரின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும்.

19-3-1919 என் இளமைக் காலப் பாடல் ‘திருவொற்றி முருகன் மும்மணிக் கோவை’க்கு உரையெழுதும் திரு. முத்து சாமிப் பிள்ளைக்கு, அப் பாடலில் பயின்றுவரும் சில சொற்கள், வாக்கியங்கள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்த இணங்கி அவர்க்கு மடல் விடுத்தேன்... ‘தமிழில் பிறமொழிக் கலப்பு' எனும் கட்டுரை எழுதத் தொடங்கினேன்.

தி

20-4-1919 வட இந்தியாவிலிருந்து திடுக்கிடும் செய்தி.* இந்திய அரசாங்கம் தேவையில்லாமல் மக்களை ஒடுக்கியும், அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றும் வன் முறையைத் தூண்டுகிறது.

25-4-1919 வடஇந்தியா பெருந்தொல்லையில் அகப்பட் டுள்ளது. பூனை, நாய்களைப்போல் மக்களை அரசாங்கம் கான்று வருகிறது. எல்லாம்வல்ல ஈசன் இத் தொல்லை களிலிருந்து நம்மை விடுவித்து, அமைதியும் பொதுநலச் சிந்தனையும் அருளட்டும்.

30-4-1919 திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ. எம்.எல்,. என்னைக் காண வந்தார். சிவஞான சுவாமிகள் குரு பூசை நிமித்தம் விக்கிரமசிங்கபுரம் சென்று உரையாற்ற வேண்டினார்; நான் இணங்கவில்லை.

25-6-1919 கனகசபையின் ‘1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்', லாசரசின் ‘தமிழ்ப் பழமொழிகள்' ஆகியவற்றைத் திருவரங்கம் அவர்கள் எனக்கென வாங்கி வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/253&oldid=1592610" இலிருந்து மீள்விக்கப்பட்டது