உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

221

10-11-1919 ‘தமிழ் ஒலியியலை'ப் பற்றி எழுதுவதற்கென கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணமும், சீனிவாச அய்யங்காரின் தமிழ் ஆய்வுகளும் படித்து வரு கின் றேன்.

11-11-1919 சீனிவாச அய்யங்காரின் ‘Tamil Studies' நூலில் தமிழ் எழுத்தைப் பற்றிய பிரிவைப் படித்தேன்; அவர்தம் கருத்துகள் என் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன.

1920

3-1-1920 காஞ்சி நாகலிங்க முதலியாரவர்கள் என்னைக் காண வந்தார்; தாம் தொடங்கவிருக்கும் ‘செங்குந்தர்’ எனும் இதழுக்குத் தலையங்கம் எழுதுமாறு வேண்டினார்; நான் இணங்கினேன்.

15-1-1920 தமிழ் ஒலியியல் பற்றி மாணிக்க நாய்க்கரவர்கள் நாளை பேசவிருக்கும் கூட்டத்துக்கு என்னைத் தலைமையேற்க வேண்டி, திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ, எம்.எல், அவர்களின் மடலுடன் திரு. இராமசாமி இன்று விடியற்காலை வந்தார்.நான் இணங்கினேன்.

16-1-1920 மாநிலக் கல்லூரிக்குச் சென்று, தொல்காப்பியத் திலிருந்து தாம் புதிதாகக் கண்டுபிடித்துள்ள தமிழ் ஒலியியல் முறை பற்றிய மாணிக்க நாய்க்கரவர்களின் சொற்பொழிவுக் கூட்டத்துக்குத் தலைமையேற்றேன். அவர் ஒரு பேரறிஞர். அவர்தம் உரை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்தது.

17-1-1920 நேற்றைய கூட்டத்தில் நான் தூய தமிழில் பேசினேன்.பின்னர் மாணிக்க நாய்க்கரவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன். னேன். என் ஒத்துழைப்புக் கிடைக்குமாயின் அறிவுலகத்தைத் தம்வயப்படுத்திவிட முடியும் என்று அவர் கூறினார்.

17-2-1920 Bombay Humanitarian Leage வெளியிடும் The Indian Humanitarian Ƒ... Man in Nature's King- dom எனும் என் கட்டுரை, என் ஒளிப்படத்துடன் வெளிவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/254&oldid=1592611" இலிருந்து மீள்விக்கப்பட்டது