உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

-

மறைமலையம் 30

பின்னர்அவை பறந்து சென்றன. இத்தனை ஆண்டுகளாக இதே கழுகுகள் நாளும் வருவதென்பது இறையருளேயாம்! 5-7-1921 யாழ்ப்பாணம் கனகராயரிடமிருந்து ஊக்கந் தரும் கடிதம் வந்தது.

13-9-1921 மலபார், சென்னை, வட மாகாணங்கள் ஆகிய ங்களில் நிலவும் குழப்ப நிலை எனக்குத் துன்பத்தைத் தருகின்றது.பஞ்சமர்க்கும், பிற சாதி இந்துக்களுக்கும் இடையே நிலவும் பகைமையும், மலபார் மாப்பிள்ளைமாரின் சீற்றமும் வருந்தற்குரியன.* ஈசன் அருளட்டும்!

24-12-1921 கீரிமலை, யாழ்ப்பாணம்... யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்கள் அருமையாக உள்ளன. வீடுகள் அருகருகே உள்ளன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும், முழுக் குடும்பத்தைப் புரக்கும் அளவுக்குத் தென்னை, பனை மரங்கள் உள்ளன. ஏழைகள் மிகக் குறைவு. அனைவரும் நல்ல உழைப் பாளிகள். தூய அழகிய தமிழை அவர்கள் பேசினாலும், ஒலிப்பு முறை நன்றாயில்லாமல், தெளிவற்றதாக உள்ளது. கைம்பெண் களுக்கு எளிதில் திருமணம் நடக்கிறது. கணவனுக்கும் மனைவிக்குமுள்ள உறவு நெகிழ்ந்து காணக் கிடக்கின்றது. அவர்கள் திருமணமுறிவு பெற்று மறுமணம் கொள்ளலாம். இது ஒரு நல்லமுறை. பெண்கள் விடுதலையாய்

உள்ளனர்.

சய்து

26-12-1921 பண்டித நவநீதகிருட்டிண பாரதி தமது தமிழ்ப் பாடல்களைக் காட்டி, அவற்றுக்குச் சாற்றுக்கவி தருமாறு வேண்டினார். அவை கடினமான செய்யுளாக இருக்கின்றன எ வேயன்றி, கலையழகு சிறிதும் இல்லை. எனவே, சாற்றுக்கவி எழுதித் தர மறுத்தேன்.

1923

5-1-1923 என் நூல்களை அச்சிடுவதற்கு உதவியாக டாக்டர் (ஆனந்த) குமாரசாமி அவர்கள் ரூ.100உம், திரு. சி. அரியநாயகம் ரூ.200உம் சில நாளுக்கு முன்னர் அனுப்பினர். என் ஆழ்ந்த நன்றியை வெளியிட்டு அவர்கட்கு மடல் விடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/257&oldid=1592614" இலிருந்து மீள்விக்கப்பட்டது