உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

225

12-1-1923 என்னுடைய 'மனிதவசியம்' நூலில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழ்ச் சொற்களைப் பெய்தேன்.

2-2-1923 ஒரு புதுநூலை வாங்கும் போது இறைவன் அருளைப் பெற்றாற்போன்ற சொல்லொணா இன்பம் அடைகின்றேன்.

20-2-1923 ‘மெய்கண்டான்' எனும் திங்களிதழில், எனது திருவாசகவுரையை ஆதரித்தும், என் கருத்துகளைக் கண்டிக் காமல் தனிப்பட்ட முறையில் என்னை வசைபாடிய ஒருவரைக் கண்டித்தும் என் நண்பரொருவர் எழுதியுள்ளார். ஈசன் அவர்க்கு அருளட்டும்!

21-3-1923 பெரியபுராண இடைச் செருகல்களைப் பற்றிய என் கட்டுரைக்கு வந்த கண்டனத்துக்கு மறுப்பு எழுதி வருகிறேன்.

23-4-1923 என் மகள் நீலா எழுதிய 'தனித்தமிழ்ப் பாது காப்பு' எனும் கட்டுரையைத் 'திராவிடனு’க்கு விடுத்தேன்.

1-7-1923

'மாணிக்கவாசகர்

தொடர்ந்து எழுதி வருகிறேன்.

வரலாறும் காலமும்

7-7-1923 யாழ்ப்பாணம் 'தேசாபிமானி' இதழுக்குச் ‘சமயங் களுங்-கொல்லாமையும் புலாலுண்ணாமையும்' எனும் கட்டுரை அனுப்பி வைத்தேன்.

6-8-1923 வேளாளர் சூத்திரரேயென்றும், தாமும் தம் சாதி யினருமே வைசியர் என்றும் எழுதிய ‘தனவைசிய ஊழியனி'ன் ஆசிரியர் கூற்றை மறுத்து 'வேளாளர் யார்?' எனும் கட்டுரை எழுதி வருகிறேன்.

26-8-1923 ‘வேளாளரை’ப் பற்றிய என் கட்டுரையின் ஒரு பகுதி நேற்றைய ‘திராவிட'னில் வெளிவந்தது.

13-9-1923 கண்டனம் ஒன்றுக்கு மறுப்பு எழுதி வருகிறேன். இவ்வகைத் தொல்லை என் வேலைக்குத் தடையாகவுள்ளது.

21-10-1923 தேவாரப் பாடல்களை இசைத்தட்டில் கேட்டு மகிழ்ந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/258&oldid=1592615" இலிருந்து மீள்விக்கப்பட்டது