உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

6-12-1923

மறைமலையம் - 30 செந்தமிழ்ச் செல்வி'யில்

திரு. கா.

சுப்பிரமணியப் பிள்ளை எழுதியுள்ள திருநான்மறை விளக்கம்’ கட்டுரை படித்தேன்; அவர்தம் கருத்துகள் என்றன் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன.

1924

2-1-1924 Gilbert Slater 'The Dravidian Element in Indian Culture' எனும் புதிய நூலைப் படித்து வருகிறேன். சென்ற 22 ஆண்டாக நான் சொல்லிவரும் கருத்துகளை நூலாசிரியர் எதிரொலிக்கிறார்.

5-1-1924 தமிழ் நடை பற்றிய 'தமிழகம்' இதழ்த் துணை யாசிரியரின் தவறான கோட்பாட்டை மறுத்து நீலாவுக்காகக் கட்டுரை எழுதி வருகிறேன்.

.

12-1-1924 நேற்றைய ‘திராவிடன்' இதழ் வாயிலாக, என் புரவலர் கொழும்பு சர்.பி. அருணாசலம் அவர்கள் மறைந்த செய்தி அறிந்தேன். இச் செய்தி திடீரென வந்து என்னைத் தாக்கிற்று. நெகிழ்ந்த L மனத்தோடும் நீர் பெருகும் கண்களோடும் இக் குறிப்பை எழுதுகின்றேன். தமிழாய்ந்த புரவலரையும், உண்மை நண்பரையும் நான் இழந்தேன்.

14-1-1924 'வேளிர் வரலாறு' படித்து முடித்தேன். பல வரலாற்றுச் செய்திகள் நிரம்பியுள்ளதெனினும், கருதுகோள் களும் முடிவுகளும் பொருளில்லாமலும் சான்றுகளின்றியும் உள்ளன.

22-1-1924 சோழப் பெருமன்னன் கரிகாலனின் காலத்தை உறுதி செய்வதற்கென இன்று முழுவதும் ஆய்ந்து கொண்டிருந் தேன். 20 ஆண்டுக்கு முன் நான் எழுதிய திருக்குறள் ஆராய்ச்சி யுரையில் குறித்தவாறே கி.மு. முதல் நூற்றாண் டென்று முடிவு செய்தேன். ஈசன் ஈசன் அருளால், என் இளமை யிலிருந்து செய்துவரும் இலக்கிய எழுத்துகளில் பிழை நேராமல் இருந்து வருகின்றது. அடிப்படைச் செய்திகள் எவற்றிலும் மாற்றம் செய்யவேண்டிய தேவை ஏற்படவில்லை என்பதுடன் காலம் செல்லச் செல்லப் புதிய உண்மைகள் அவற்றுக்கு வலிமையே சேர்க்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/259&oldid=1592617" இலிருந்து மீள்விக்கப்பட்டது