உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

227

5-2-1924 இந்து இதழில், தமிழர் சமயத்தைப் பழித்து எழுதிய திரு.வி.வி. இரமணனின் கட்டுரைகளைத் திரு. கா. சுப்பிர மணியப் பிள்ளை அனுப்பி வைத்தார்.

3-3-1924 இன்றைய ‘திராவிடன்' இதழில் 'வேளாளர்

யாவர்' நூலுக்கு நன்மதிப்புரை வெளிவந்தது.

22-3-1924 ‘திராவிட'னின் தலைமை ஆசிரியர் திரு. ஏ. சண்முகம் பிள்ளை 3:00 மணிக்கு வந்தார். 5:00 மணி வரை உரையாடிக் கொண்டிருந்தோம்.

13-4-1924

சட்டக் கல்லூரிப் பேராசிரியர் திரு. பாலகிருட்டிணப் பிள்ளை என்னைக் காணவந்தார். ஆங்கிலக் கவிஞர், உரைவாணர் சிலருடைய படைப்புகளின் தமிழாக்கமான பருந்தும் நிழலும்' எனும் நூலை மதிப்புரைக்காகக் கொடுத்தார்.

என்

4-6-1924 ‘செந்தமிழ்' 15ஆம் தொகுதியின் ‘மூன்றாம் சங்கம்' பற்றிய சங்கர அய்யரின் கருத்தாழமிக்க கட்டுரையையும் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்காரின் 'Some Contributions of South India to Indian Culture' நூலையும் படித்து வருகிறேன்.

L

5-6-1924 சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசி ரியர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காருக்கு ஒரு நெடு மடல் பதிலாக விடுத்தேன்; பார்ப்பனரைப் பற்றி சைவ சமயக் குரவரின் எண்ணங்களையும் அவர்தம் சிந்தனை, செயல் ஆகியன பற்றியும், சைவ வைணவம் ஆகியவற்றுக்கிடையே யான அடிப்படை வேறுபாடுகளையும் விளக்கி அவருக்கு எழுதினேன்.

6-6-1924 டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் கேட்டுக் கொண்டபடி ‘மாணிக்கவாசகர் வரலாறு' என்ற எனது புதிய நூலையும் சைவசித்தாந்த ஞானபோதம் நூலையும் என் மகன் திருநாவுக்கரசு மூலமாக அனுப்பி வைத்தேன்.

4-7-1924

எனது ‘மாணிக்கவாசகர் வரலாறு’ நூலை படித்து மகிழ்ந்ததாகவும், அதற்கு ஒரு முன்னுரையைத் தாம் எழுதக்கூடும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் மடல் விடுத்திருந்தார். அவ்வாறு அவர் எழுதவிருக்கும் முன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/260&oldid=1592618" இலிருந்து மீள்விக்கப்பட்டது