உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் 30

ரையில், தனித்தமிழை வளர்த்து, வளப்படுத்துவதன் தேவையை வலியுறுத்தி எழுதுமாறு வேண்டி அவர்க்கு பதில் விடுத்தேன்.

24-7-1924 துயரச் செய்தி. தென்னிந்தியா முழுவதையும் வெள்ளம் அடித்துச் சென்று விட்டது.

19-8-1924 இரவீந்தரர் தம் கவிதைகளை இசை நயத்துடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பது படிப்பதற்கு மிக னிமையாக இருக்கின்றது. உள்ளடக்கத்தைவிட அவர்தம் ஆங்கில நடையே சுவையாக இருக்கின்றது.*

3-9-1924 இரண்டாம் வரகுண பாண்டியனின் கல்வெட் டை ப் படிப்பதற்கென கன்னிமாரா நூலகம் சென்றேன்.

24-9-1924 தூத்துக்குடி செகவீரபாண்டியனார் கேட்டுக் கொண்டபடி அவர்தம் 'திருக்குறட் குமரேச வெண்பா வுக்குக் கருத்துரை எழுதி விடுத்தேன்.

10-10-1924 பாம்பன் சுவாமிகளின் ‘நாலாயிரப் பிரபந்த விசாரம்' படித்து வருகிறேன். என் குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரின் வழியில் நுணுகி ஆராய்ந்து, இந் நூல் எழுதப் பட்டுள்ளது.

15-10-1924 கீழைத்தேய மாநாட்டுக்கென The Conception of God as Rudra எனும் பொழிவு எழுதத் தொடங்கினேன். பேச்சுக்குரிய பொருளாக இதனை எடுத்துக் கொள்வதற்கு டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் இணங்கினார்.

23-12-1924 கீழைத்தேய மாநாட்டில் என் கட்டுரைக்காகப் பொன்னாடை போர்த்தப்படும் என்று அறிவிக்கும் திரு. சாஸ்திரியின் கடிதம் மிகத் தாமதமாக வந்தது.

க்

27-12-1924 அனைந்திந்திய கீழைத்தேய மாநாட்டுக்கு என்னை அழைக்காதிருந்தமைக்குக் காரணம் கூறிய பின்னரே அவரைச் சென்று காணமுடியும் என்று டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காருக்குப் பதில் விடுத்தேன்.

1925

3-1-1925 எனக்கு அழைப்பிதழ் வராமைக்கான காரணத்தை விளக்கி டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் மடல் எழுதியிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/261&oldid=1592619" இலிருந்து மீள்விக்கப்பட்டது