உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

229

5-1-1925 விசையுந்தில் மயிலாப்பூர் சென்றேன். டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் என்னை வரவேற்றார். கடவுளின் தாயும் தந்தையுமான நிலை, சிவலிங்கம் ஆகியன பற்றி நெடு நேரம் உரையாடினோம். என் வாதத்தில் உள்ள வன்மையை அவர் ஏற்றுக் கொண்டார். அனைத்திந்திய கீழைத்தேய மாநாட்டினர் வழங்கிய பொன்னாடையை அவர் என்னிடம் ஒப்படைத்தார்.

18-1-1925 இலங்கையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளதால், 'சிந்தனைக் கட்டுரைகள்’ நூலை இரண்டாம் பதிப்புக்கெனத் திருத்தத் தொடங்கினேன்.

19-3-1925 இறைவன் அருளால் நீலாவின் ‘தனித் தமிழ்க் கட்டுரைகள்’ நூலின் முதற்படிவம் 1000 படி அச்சாயின.

23-4-1925 ‘தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது' எனும் நீலாவின் கட்டுரையைத் ‘திராவிடன்’, ‘தமிழ்நாடு' இதழ்கட்கு அனுப்பினேன்.

25-4-1925 'தமிழ்நா

வார இதழில் நீலாவின் கட்டுரையை வெளியிடுவதன் தொடர்பில், டாக்டர் பி. வரதராசுலு நாயுடுவைக் காண என் மூன்றாம் மகன் சன்றான்; எம் கட்டுரைகட்கு ஊதியம் வழங்க அவர் இணங்கினார்.

26-4-1925 நேற்றைய 'திராவிடனில்' நீலாவின் கட்டுரை வெளி வந்தது. ஆனால், அச்சுப் பிழைகள் மிகுதி. எனவே, அதன் ஆசிரியர் கண்ணப்பர்க்கு மடல் விடுத்தேன்.

30-4-1925 பார்ப்பனரல்லாதாரின் பெருந்தலைவர் சர். பி. தியாகராய செட்டியார் நேற்று உயிர் துறந்தார் எனும் செய்தியை ஆழ்ந்த வருத்தத்தோடும் துயரோடும் பதிவு செய்கின்றேன்.

5-5-1925 பார்ப்பனரல்லாதாரின் தன்னலமில்லாப் பெருந்தலைவர் சர்.பி. தியாகராய செட்டியார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் மருத்துவகுலச் சங்கத்தின் சார்பில் பண்டிதர் ஆனந்தம் அவர்கள் இல்லத்தில் நேற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/262&oldid=1592621" இலிருந்து மீள்விக்கப்பட்டது