உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

231

குடும்பத்தை நன்கு பேணுதற்கு உரிய கல்வியையே பெண் மக்களுக்கு வழங்கல் வேண்டும் என்றார்.

9-3-1926 இரவீந்தரநாத தாகூரின் ‘சித்ரா’ எனும் ' அருமையான நாடகத்தைப் படித்தேன்! என் மனத்தைத் தொட்டது. என் படைப்பாற்றலை இந்நூல் தட்டி எழுப்பி யுள்ளது. ஆதிமந்தியைக் கதைத்தலைவியாகக் கொண்டு தமிழில் இத்தகையதொரு நாடகம் எழுத எண்ணியுள்ளேன்.

27-4-1926 கல்வியும் சமயப்பற்றும் தூய்மையும் உடை ய பஞ்சம நண்பர் சிலர் என்னைக் காண வந்தனர். இரவு 8.30 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம்.

14-5-1926

ஞானசாகரம்’

13ஆம்

தொகுதிக்கு வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரிடமிருந்து கையொப்பக் கட்டணம் ரூ.4 வந்தது.

16-5-1926 இன்று பிற்பகல் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்களும் அவர்தம் நண்பரொருவரும் என்னைக்

б

காண வந்தனர்.

1-7-1926 கரந்தைப்

பிள்ளைக்கு மடல் விடுத்தேன்.

பண்டிதர் வேங்கடாசலம்

22-7-1926 பிற்பகலில் திரு. சுரேந்திரநாத ஆரியா என்னைப் புரசைவாக்கத்திலுள்ள தமது படிப்பறைக்கு அழைத்துச் சென்றார். அங்குச் சைவ சித்தாந்தம் குறித்து நெடுவுரை ஆற்றினேன்.

.

25-7-1926 ரூ.200 ரூ.200 மாதச் L

சம்பளத்துக்குத் தமிழ்ப்

பேரகராதியின் ஆசிரியர் குழுவில் என்னைப் பணியாற்றுமாறு பண்டிதர் கோவிந்தராச முதலியாரும் பண்டிதர் கண்ணையா நாயுடுவும் வேண்டினர். இறையடிச் சேவையை விட்டு மனிதர்க்குப் பணிபுரிதல் இயலாதென்று மறுத்தேன்.

10-8-1926 தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுவதைப் பற்றி என் கருத்தறிய விரும்பிய தமிழ்ப் பல்கலைக்கழகக் குழுவின் செயலா ளர்க்கு, அவ்வாறு நிறுவுவதன் தேவையின்மையை வலியுறுத்தி எழுதினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/264&oldid=1592623" இலிருந்து மீள்விக்கப்பட்டது