உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் - 30 ×

28-8-1926 ‘No Need for a Tamil University' எனும் கட்டுரையை ‘மதராஸ் மெயில்', 'இந்து’, 'ஜஸ்டிஸ்' ஆகிய இதழாசிரியருக்கு அனுப்பி வைத்தேன்.

28-8-1926 ‘கலிகாலக் கொடுமைகள் எவ்வெவை?' எனும் என் கட்டுரையைக் கந்தரோடை கந்தையாப் பிள்ளைக்கு அனுப்பி வைத்தேன்.

20-9-1926 என் மாணவர் (நாரண.) துரைக்கண்ணன் பிற்பகல் என்னைக் காண வந்தார்.

26-9-1926 செல்வ நிலையினராக இல்லாதிருப்பினும் தமிழார்வம் மிக்கவராயிருக்கும் மாணவர் கிருஷ்ணாம் பேட்டை துரைக்கண்ணனும் இன்று பாடங் கேட்க வந்தார்.

23/24-10-1926 பாலூர் மணவழகு மாணவர் மன்றக் கூட்டம் சீத்தனஞ்சேரியில் நடப்பதாக இருந்தது. ஆனால், அழைப் பிதழின்படி பாலூரிலேயே கூட்டம் நடத்தல் வேண்டும் என்று என் மாணவர் பண்டிதமணி. திருநாவுக்கரசு வலியுறுத்தினார். இதைப் பற்றித் திரு. வையாபுரிக்கும் திரு. மணி. திருநாவு கரசுக்கும் இடையே சிக்கல் எழுந்தது. முதலில் சீத்தனஞ்சேரி கோயிலில் ஒரு மணி நேரம் உரையாற்றினேன். பின்னர், பாலூர் சன்றேன். அங்கே கிராம முன்சீபின் தோப்பில் திரு. இராமசாமி முதலியாரின் தலைமையில் நீதிக் கட்சிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இருப்பினும் என்னை அன்புடன் வரவேற்றனர். பின்னர் மணவழகு மாணவர் சங்கக் கூட்டம் என் தலைமையில் நடந்தது. திரு. பி. கண்ணப்ப முதலியார் பேசினார்.

of

ம்

8-12-1926 திராவிட ஆய்வு மைய இயக்குநர் (Director of the Board of Dravidian Studies) பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேனா என்று திரு. வ. சுப்பையா பிள்ளை வாயிலாக திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை வினவினார். இறைப் பணிக்கு என்னை ஆட்படுத்திக் கொண்ட பிறகு அவ்வேலைக்கு விண்ணப்பிக்க மாட்டேன் என்றும், பதிவாளரே அப் பொறுப்பை எனக்கு அளித்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் பதில் விடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/265&oldid=1592625" இலிருந்து மீள்விக்கப்பட்டது