உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

1927

L

233

3-1-1927 வேப்பேரி சென்று திரு. பவானந்தம் பிள்ளையைக் கண்டேன். அன்புடன் ன் பேசினார். சில காலத்துக்கு முன்னர் நான் திருத்திக் கொடுத்த தொல்காப்பியப் பதிப்பின் பிற பகுதிகள் மூன்றையும் கொடுத்தார்.

28-1-1927 ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்' நூலின் ஒரு பகுதியான 'தொல்காப்பியர் கால'த்தைச் செந்தமிழ்ச் செல்வியில் வெளியிடற்கு அதன் வெளியீட்டாளர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கட்கு அனுமதியளித்தேன்.

13-2-1927 இன்று முழுவதும் திரு. பா.வே. மாணிக்க நாய்க்கரின் Betwixt Ourselves in the Madras Zo0, எனும் நூலுக்கு ஆங்கில மதிப்புரை எழுதிக் கொண்டிருந்தேன்.

17-2-1927 பேரூர் சாந்தலிங்க சாமிகள் மடத்தின் சத்வித்ய சன்மார்க்க சங்கத்தின் மாநாடு தலைமையேற்றேன். திருச்சி அ.மு. சரவண முதலியார் இனிமையான தமிழில் மாணிக்க வாசகரைப் பற்றிப் பேசினார். இவ்வறிஞரின் பேச்சு என் மனத்தைத் தொட்டது. பின்னர், தி. சச்சிதானந்தம் பிள்ளை யவர்கள் பேசினார். சில செய்திகளைத் தெளிவுபடுத்திப் பேசி, மாநாட்டை முடித்து வைத்தேன்.

27-3-1927 தாம் மீண்டும் தொடங்கவிருக்கும் 'கலா சிந்தாமணி' இதழுக்கு மயிலாப்பூர் மாணிக்கவேலு முதலியார் என்னிடம் கட்டுரை கேட்டார். 'தமிழ் நாடு' பொங்கல் சிறப்பிதழில் வெளியான மக்கள் கடமை கட்டுரையை மறு வெளியீடு செய்ய அனுமதியளித்தேன்.

22-7-1927 காலையில் தஞ்சை சந்திப்பு வந்தடைந்தேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரன் பிள்ளையும் செயலாளர் வேங்க ாசலம் பிள்ளையும் என்னை வரவேற்றனர்.

24-7-1927 கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழா.. தலைமை யேற்பு... பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 'உரை யாசிரியர்' பற்றிச் சொற்பொழிவாற்றினார்... சிலப்பதிகாரக் கதை மாந்தரைப் பற்றித் தெளிவுபட விளக்கிக் கூறி விழாவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/266&oldid=1592626" இலிருந்து மீள்விக்கப்பட்டது