உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

263

18-3-1950 கெயிட்டி திரையரங்கு சென்று 'பொன்முடி' பார்த்தேன். அருமையாக இருந்தது.

4-8-1950 பெரியார் ஈ.வே. இராமசாமி நாய்க்கர், ஆடல ரசுவுடன் என்னைக் காண வந்தார். ஒரு மணி நேரம் உரை யாடினோம்.

அடிக்குறிப்புகள்

  • வந்தே மாதரம்

1. "கோயில்தொறும் கோயில்தொறும் அருட்கோலங் கொண்டிருக்கும்

தாய்துர்க்கே தமியேம்நின் படிவமன்றே பரவுவதே;

பாய்படைகள் பதின்கரத்தும் பற்றுகின்ற தாய்துர்க்கே

சேயிதழ்த்தா மரைநிழல்வாழ் திருமகளும் நீயன்றே;

மேயகலை விழுப்பொருள்கள் விளக்குமின்னும் நீயானால்

(1)

சேயேம்நின் திருவடிகள் வாழ்த்துவதும் சிறப்பாமே;

அன்னாய் வாழி, யரும் பொன்னாள் வாழி, ஒப்பில்

மின்னாள் வாழி. கனி நீரும்வாழி, வந்தே மாதரதரம்; களங்கமிலா தினிதாகி வளம்பெறுநன் னனகைதுலங்க

விளங்குபசுங் கதிர்முகம்எங் களைகணாம் அன்னாய், நின்

இளங்குமுத வாய்முகமெம் இன்னுணவாம் அன்னாய் வந்தே மாதரம்”

(2)

(மறைமலையடிகளார் பாமணிக்கோவை)

2.

திரு. வி. க. வின் தமையனார்

3. ஜாலியன் வாலா பாக் - பஞ்சாப் படுகொலையைப் பற்றிய குறிப்பு இது.

4.

1921 ஆம் ஆண்டு சூன் முதல் நவம்பர் வரை சென்னை பின்னி ஆலைகளில் நடந்த வரலாற்றுப் புகழ்மிக்க வேலை நிறுத்தம் பற்றிய குறிப்பு இது.

6. தம்முடைய 'கீதாஞ்சலி' நூற்பிரதியின் இறுதியில் அடிகளார் 22.8.1931 எனும் நாளிட்டு எழுதியுள்ள வருமாறு : "மாணிக்க வாசகரின் நெஞ்சுருக்கும் பாடல் ஊற்றில் ஆழ்ந்த நமக்குக் 'கீதாஞ்சலிப் பாடல்கள் சுவையற்று இருக்கின்றன”.

7.

1942 ஆம் ஆண்டுக்குரிய குறிப்புகள் கழகத்தின் திருக்குறள் நாட்குறிப்பேட்டில் எழுதப் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/296&oldid=1592660" இலிருந்து மீள்விக்கப்பட்டது