உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் - 30 -

பண்டிதர் இராசமாணிக்கம் பிள்ளை வந்தார். எழுதிக் கொடுத்தேன்.

25-12-1948

டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகக் கம்பெனியாரை என் மாணவர் நாரண. துரைக்கண்ணன் அழைத்து வந்தார்.

5-2-1949 பகவத் கீதையை அருமையாகச் செந்தமிழில் மொழிபெயர்த்த கொழும்புப் புலவர் பாண்டியர்க்கு வாழ்த் துரைக் கடிதம் விடுத்தேன்.

16-4-1949 பிரம்பூர் பாரக்ஸ் திரையரங்கில் 'வேலைக் காரி' பார்த்தோம். முற்பகுதியை விடப் பிற்பகுதியே

நன்றாயிருந்தது.

1-7-1949 டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், பண்டிதர் ராசமாணிக்கம் பிள்ளை, திரு. தேவநேயன் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்க்கு பதில் விடுத்தேன்.

4-7-1949 ‘சைவ சித்தாந்தத்தை’ப் பற்றிக் கட்டுரை எழுத இணங்கி, கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர்க்குக் கடிதம் விடுத்தேன்.

1949-1950 10

23-11-1949 வால்டாக்சு சாலையிலுள்ள அரங்குக்குச் சென்று டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தும் ‘சேரன் செங்குட் டுவன்' நாடகம் பார்த்தேன். கண்ணகி வரலாற்றின் இறுதிப் பகுதி இதல் சேர்க்கப்படவில்லையாதலால் நாடகம் சுவையாக அமையவில்லை.

20-1-1950 திருக்குறளுக்கு உரையெழுதத் தொடங்கினேன். முற்றிலும் குறட்பாக்களாலான ‘வாழ்க்கைக் குறள்’ எனும் நூலையும் எழுதத் தொடங்கினேன். இவ்விரண்டு பணி களையும் முடிக்க இறைவன் அருளட்டும்!

14-2-1950 என் ஒளிப்படம் கொண்ட அச்சுக் கட்டையை (block) அனுப்பி வைக்குமாறு ‘தமிழ் நாடு' இதழாசிரியர் கி.ஆ.பெ. விசுவநாதம் மடல் விடுத்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/295&oldid=1592659" இலிருந்து மீள்விக்கப்பட்டது