உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

கொண்டிருக்கின்றனர்.

261

இந்தியர்க்கு நல்லறிவையும்

அன்புணர்வையும் ஈசன் அருள்வானோ?

31-1-1948 நேற்று மாலையில் திரு. காந்தியை மராத்திய இளைஞன் ஒருவன் சுட்டுக் கொன்றான் என்ற துயரச் செய்தி யை அறிந்தேன். இக்கொடுஞ்செயலின் விளைவு எப்படியிருக்கு மோ? எங்கும் விடுமுறையே. முற்பகலுக்குப் பிறகு மின்சாரத் தொடர்வண்டி ஓடவில்லை. காந்தியின் ஆன்மாவுக்கும் மக்கள் அனைவர்க்கும் ஈசன் அமைதி வழங்கட்டும்!

28-2-1948 திரு. கா. அப்பாதுரைப் பிள்ளை வந்தார். நான் முன்னுரை வழங்குவதற்கெனத் தாம் எழுதிய ‘India's Language Problem' எனும் நூலைக் கொடுத்துச் சென்றார். அதனைப் படித்துத் திருத்தங்களைச் செய்து வருகிறேன்.

11-5-1948 திரு. மயிலை. சீனி. வேங்கடசாமி வந்தார். என் உடல் நலம் சரியில்லாததால் அவர்தம் நூலைப் படித்து முன்னுரை தர முடியாத நிலையிலிருக்கின்றேன் என்று று சால்லி எழுவகைத் தாண்டவம்' நூலைத் திருப்பிக் காடுத்தேன்.

17-7-1948 இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குச் சென்றேன். பெரியார் இராமசாமி நாய்க்கரவர்களும், திரு. வி. கலியாண சுந்தர முதலியாரவர்களும் வேறு சில பெரி யோரும் என்னைத் னைத் தலைமையேற்க வேண்டினர். என் திரிபுரசுந்தரி தன் கணவனையும், மகன் நம்பியையும் அழைத்துக் கொண்டு மாநாட்டுக்கு வந்தாள்.

மகள்

31-7-1948 திரு. சோமசுந்தர பாரதியாரின் எழுபதாம் ஆண்டுப் பிறந்த நாளை ஒட்டி அவரை வாழ்த்தி மடல் ஆ டுத்தேன்.

திரு.ஈ.வே.

5-11-1948 திரு. ஈ.வே. இராமசாமியைப் பற்றி ஒரு பாராட்டுரை எழுதி புதுவை ஞாயிறு நூற் பதிப்பகத்துக்கு விடுத்தேன்.

அவினாசிலிங்கம்

22-12-1948 கல்வி அமைச்சர் செட்டியாரவர்களுக்குப் பரிந்துரைக் கடிதம் பெற வேண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/294&oldid=1592658" இலிருந்து மீள்விக்கப்பட்டது