உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

-30

மறைமலையம் - 30

9-10-1946 மெளனச்சாமியார் தமக்கு ஓர் ஆறிமுகக் கடிதம் தருமாறு கேட்டார். அவர்க்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை உண்டென்பதால் அவ்வாறே கொடுத்தேன்.

15-1-1947 பண்டிதர் கண்ணப்ப முதலியாரை அழைத்துக் காண்டு திரு. மா. இராசமாணிக்கம் பிள்ளை வந்தார். மூன்று திரு.மா. தொகுதிகளாகத் தமிழில் தாம் எழுதிய சோழர் வரலாற்று நூலை எனக்களித்தார்.

9-2-1947 தமது நூல் வெளியீட்டாளர் மே. சக்கரவர்த்தி நயினாரை அழைத்துக் கொண்டு பண்டிதர் நவாலியூர் கந்தையா என்னைக் காண வந்தார். தாம் எழுதிய ‘தமிழர் யார்?', 'தமிழர் சமயம் யாது' எனும் நூல்களைஎனக்கு வழங்கினார்.

22-7-1947 தமிழ் மொழியைப் பற்றிப் பொருளில் லாமல் ஏதேதோ சொல்லியுள்ள திரு. காந்திக்கு ஒரு மறுப்புக் கட்டுரை எழுதத் தொடங்கினேன்.

15-8-1947 இப்பகுதிவாழ் மக்களும் விடுதலை நாளைச் சிறப்புறக் கொண்டாடினர்.

16-9-1947 அச்சறைகளையும் பிற அச்சகப் பொருள் 'தினத்தந்தி' மேலாளர்க்கு விற்று

களையும் சென்னை விட்டேன்.

22-9-1947 பண்டிதர் மா. இராசமாணிக்கம் பிள்ளை வந்தார். தாம் வெளியிடவிருக்கும் ‘ஆராய்ச்சிக் கட்டுரைகள் நூலின் கையெழுத்துப் படியைக் கொடுத்து என்னை முன்னுரை எழுதித் தருமாறு வேண்டினார். ஒரு வாரத்தில் எழுதித் தருவதற்கு இணங்கினேன்.

30-11-1947 ‘பொன்னி' இதழின் ஆசிரியரும் திரு. சொக்க லிங்கமும் என்னைக் காண வந்தனர்.

15-12-1947 கடந்த மூன்று நாளாகப் பங்கீட்டு அரிசி எங்கட்குக் கிடைக்கவில்லை. மக்கள் பட்டினியால் வாடு கின்றனர். சேர்ந்து வாழ விரும்பாமல் இந்துக்களும் இசுலாமி யரும் வடநாட்டிலே ஒருவர் ஒருவரைக் கொலை செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/293&oldid=1592657" இலிருந்து மீள்விக்கப்பட்டது