உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

259

6-11-1945 என் மகள் நீலா நேற்று மறைந்தாள் என்ற துயர்மிகு செய்தியைக் கழகத்திலிருந்து திரு. நாயுடு கொண்டு வந்தார். அழுதேன்.

28-1-1946 பிற்பகல் காரைக்குடி இராய. சொக்கலிங்கம் தம் நண்பர்களுடனும், திரு. வி. கலியாணசுந்தர முதலியார காண வந்தார். நெடுநேரம்

வர்களுடனும் உரையாடினோம்.

என்னைக்

25-2-1946 ஒன்றுக்கும் உதவாத பங்கீட்டு அரிசி வழங்கல் தொடர்பாகச் சென்னை முதல் பரங்கிமலை வரையான இருப்புப்பாதை நெடுகவும் தொழிலாளர் பெருங் குழப்பம் விளைவித்தனர்.

19-3-1946 இன்றைக்கும் பங்கீட்டு அரிசி கிடைக்கவில்லை. ஆனால், இறைவன் அருளால் எம் வீட்டுப் பணிப்பெண்ணின் தந்தை ரூ.2-8 அணாவுக்கு 4 படி புழுங்கல் அரிசி வாங்கி வந்தார்.

30-3-1946 திரு. கா. அப்பாத்துரைப் பிள்ளையும், திரு. மா. இராசமாணிக்கம் பிள்ளையும் என்னைக் காண வந்தனர். திரு. இராசமாணிக்கம் பிள்ளையைச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு சர். ஏ. இராசாமி முதலியார்க்குப் பரிந்துரைக் கடிதம் கேட்டனர். கொடுத்தேன். தம்முடைய 'சேக்கிழார்’, ‘சங்க காலப் புலவர்கள்' ஆகிய நூல்களை அவர்கள் கொடுத்தனர்.

19-4-1946 பண்டிதர் தேவநேயப் பாவாணர் வந்தார். தம் தமிழ்ப் புலமைக்குச் சான்றிதழ் வழங்குமாறு வேண்டினார். கொடுக்க இணங்கினேன். தம்முடைய நூல்களான ‘திராவிடத் தாய்’, ‘கட்டுரை வரைவியல்’, ‘சுட்டு விளக்கம்’ ஆகியன எனக்குக் கொடுத்தார்.

1946-19499

8-10-1946 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மௌனச் சாமியார் என்பார் வீட்டுக்கு வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/292&oldid=1592655" இலிருந்து மீள்விக்கப்பட்டது