உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

மறைமலையடிகளார் மணிமொழிகள் தொல்காப்பியர் கழகம்

1. மறைமலையடிகள் வரலாற்று மாண்பு

அடிகள் சோழ நாட்டிலே நாகைக்கு அருகிலே காடம்பாடி என்னும் ஊரிலே சைவ வேளாண் மரபில் தோன்றிக் கல்வி, அறிவு ஒழுக்கங்களில் தலைசிறந்து சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பணியாற்றித் திகழ்ந்து மனைவி, மக்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து துறவு பூண்டு, சென்னைப் பல்லாவரத்தில் பொதுநிலைக் கழக (சமரச சன்மார்க்கத்) தலைவராய் வீற்றிருந்தவர். செந்தமிழும் சிவநெறியும் செழிக்கத் தம்பேரறிவால் அடிப்படையிட்டவர். தனித்தமிழிலே தேனும் பாலுங் கலந்தது போன்ற தீஞ் சொற்சுவை மிக்க இனிய உயரிய உரைநடை எழுதுவதிலும் சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போலச் சொன்மழை பொழிவதிலும் இவர்க்கு ஒப்பாவர் எவருமிலர், குயிலோசை போன்ற குரலினிமை வாய்க்கப் பெற்றவர். ஆங்கிலம், வடமொழிப் புலமை மிக்க அடிகள் தம் அரிய ஆராய்ச்சித் திறனால் தனித்தமிழில் பல்துறை நூல்கள் நாற்பது வெளியிட்டார். அருமையான ஆங்கில நூல்கள் மூன்றாம். பெற்றோர்: சொக்கநாதர் -சின்னம்மை. திருக் கழுக்குன்றச்சிவபெருமான் வேதாசலம் பெயர் பெற்றார் அடிகள். வரன்முறை வழாது, அடிகளார், தமிழர் நல் வாழ்வு பெற வாழ்ந்து காட்டிய அறிஞர். தம் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர் பலருடனும் தமிழ் நிறுவனங்களுடனும் சைவ சித்தாந்த சபைகளு னும் தொடர்பு கொண்டு காண் உரையாடியும் உரையாற்றியும் உணர்வூட்டினார். அடிகளிடம் தமிழ் பயின்றவர்களில் உயர் நிலை உற்றோர் பலர். அடிகளின் ன்னுயிர் 15-9-50 அன்று பிரிந்தது. 'அறிவுக்கடல்' என்னும் இதழை நடாத்தி, அரிய நூலகத்தை நிறுவி, வாழ்ந்த அடிகள் நம் நெஞ்சங்களில் என்றும் இடம் பெறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/300&oldid=1592665" இலிருந்து மீள்விக்கப்பட்டது