உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் - 30 ×

2. 'தமிழ்க் கடல்' மறைமலையடிகள் தமிழர் நல்வாழ்விற்காக ஆய்ந்து கடைப்பிடித்த அடிப்படைக் கொள்கைகள்

தமிழ் மொழியே வடமொழியினும், உலக மொழிகளினும் மாண்புடையது. தமிழ்மொழிதான் இலக்கண வரம்புடைய செம்மையுடையது.

உலகில் மக்கள் முதன் முதலில் தோன்றிய காலத்தில் பேசப்பட்ட மொழி தமிழே.

பிறப்பால் உயர்வு தாழ்வு கூறுவது தவறு எனச் சுட்டிக் காட்டிச் சாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங் களைப் போற்றியது.

சாதி வேறுபாடு, சமய வேறுபாடு இன வேறுபாடு கருதாமல் பழக வேண்டுமென அறிவுறுத்தியது.

தனித்தமிழ் இயக்கங் கண்டு திருக்கோயில்களிலும், இல்லச் சடங்குகளிலும் தமிழ் மந்திரங்களை ஓத வேண்டும் என்றது.

தமிழர் நாகரிகம் பிற நாகரிகங்களினும் முந்தியதும் மேம்பட்டதும் ஆகும்.

தமிழர்களைச் ‘சூத்திரர்கள்' எனக் கூறியதைக் கண்டித்து

ஒழித்தது.

தமிழ்ப் புலவர்களின் மதிப்பை உயர்த்தியது. போலி நூல்கள் எழுதிப் பொருளீட்டாது, அரிய தனித் தமிழ் நூல்கள் (40) வெளியிட்டது.

வ.சுப்பையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/301&oldid=1592666" இலிருந்து மீள்விக்கப்பட்டது