உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் - 30 ×

8. பொது

உள்ளத்தைத் தூயதாக வைத்து எந்நேரமும் நன்னினைவு களிலேயே அஃது ஊறி உரம் பெறுமாறு பழக்கவே, அதனால் உந்தப்படும் உடம்பும் தூயதாக உரமேறி நீண்டகாலம் உயிர்க்கு உறையுளாய் உலவும்.

தமிழ் மக்களிற் பெரும்பாலார் ஒருவர்பாலுள்ள குற்றங்களை மற்றவர் எடுத்துப் பேசுபவராய்ப் பகைமையையும் மனவருத்தத் தையும் பரவச் செய்து வருகின்றார்கள். இத்தீய பழக்கத்தை ஒழித்தால் அன்றித் தமிழ் மக்கள் முன்னேற்றமடைவது சிறிதும் முடியாது. ஒருவர்பாலுள்ள குற்றங்களை மறைத்து அவர் பாலுள்ள நலன்களை எடுத்துப் பேசுவதற்கே எல்லாரும் விடாப் பிடியாய்ப் பழகுதல் வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு மனமாரச் செய்து, அவர்களை மேன்மேலும் உயர்த்திவிடுதல் வேண்டும். தாம் செய்யும் உதவிக்குக் கைம்மாறாவதொன்றை எதிர்பார்த்தல் ஆகாது. அப்போது தான் நம்முடைய மக்கள் உண்மையான முன்னேற்றத்தை அடைவார்கள்.

காசையே பெரிதாக எண்ணி வயிறு கழுவி மாண்டு போகும் ஆட்களில் யான் ஒருவன் அல்லன்.

தமது வாழ்க்கைச் செலவிற்கும், மணச் சடங்கு பிணச் சடங்கு கட்கும் கடன் வாங்கியாகிலும் மிகுதியாகச் செலவழிக் கின்றார்கள். அவையெல்லாம் பெருஞ் செலவாக அவர் களுக்குத் தோன்றவில்லை. எப்போதோ அருமையாக வாங்கும் இரண்டொரு நூலுக்காகுஞ் செலவையே பெரிதாக நினைக் கிறார்கள். இப்படி யிருந்தால் நம் தமிழ்நாடு எக் காலத்தில் முன்னேற்ற மடையுமோ தெரியவில்லை.

முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/307&oldid=1592674" இலிருந்து மீள்விக்கப்பட்டது