உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

273

7. சீர்திருத்தம்

பலப்பல புராணக் கதைகளுள் கடவுளிலக்கணத்துக்குப் பொருந்துவனவும் அதற்குப் பொருந்தாதனவும் இருக்கின்றன. அவைகளை யெல்லா' ம் செவ்வையாக ஆராய்ந்து பார்த்துப் பொருத்தமானவைகளை விளக்கி எழுதிப் பொருந்தாதவைகளை விலக்கி விடுவதற்கு உரிய சீர்திருத்தம் முதன்மையாகச்

செயற்பாலதாகும்.

பொருத்தமில்லாத வகையாய் மணம் பூட்டப்பட்டுப் பாம்பும் கீரியும் போல் ஒருவரை யொவருர் பகைத்துப் பேரல்லலிற் பட்டு உழலும் கணவனையும் மனைவியையும் அக்கூட்டுறவினின்றும் வேறு பிரித்து மறுபடியும் அவர்களை இயைபானவரோடு மணம் புணர்த்துதல் வேண்டும்.

முப்பதாண்டுகட்கு உட்பட்ட பெண்கள் கணவனை இழந்து டுவார்களானால், அவர்களைத் திரும்ப மணஞ் செய்து காடுத்தல் வேண்டும். ஆண்மக்களில் நாற்பதாண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம்பெண்களை மணஞ் செய்தல் ஆகாது. அப்படிச் செய்ய முந்துகின்றவர்களை எல்லாவகையானும் தடை செய்தல் வேண்டும். நாற்பதாண்டுக்கு மேற்பட்ட ஆண்பாலார் மணஞ்செய்து கொள்ள வேண்டுவார்களானால் தம் ஆண்டுக்கு ஏறக்குறைய ஒத்த கைம்பெண்களையே அவர்கள் மணஞ்செய்து கொள்ளும்படி தூண்டுதல் வேண்டும்.

தமிழ் நாட்டிலுள்ள மக்கள் ஊன் தின்பவரும் ஊன் தின்னாத சைவரும் என்னும் இரு பெரும் பிரிவில் நின்றாற் போதும். சைவரிலேயே பல வகுப்புகளும், அங்ஙனமே ஊன் தின்பவர்களிற் பலப் பல வகுப்புகளும் இருத்தல் பொருளற்ற வேற்றுமையாய் ஓயாத சாதிச் சண்டைகளை உண்டாக்குவதாய் இருக்கின்றது. பொருளற்ற இவ்வேறுபாடுகளை முற்றும் ஒழிப்பதற்கும் எல்லாரும் பெருமுயற்சி செய்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/306&oldid=1592672" இலிருந்து மீள்விக்கப்பட்டது