உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் - 30 ×

6. சமயம், கோயில், வழிபாடு

ப்போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்களிற் பெரும்பாலார் எல்லாம் வல்ல ஒரு தெய்வத்தை வணங்காமல், இறந்து போன மக்களின் ஆவிகளையும் பல பேய்களையும் இவை போன்ற வேறு சில சிறு தெய்வங்களையும் வணங்கி அவற்றுக்காகப் பல கோடிக்கணக்கான கோழிகளையும் ஆடுகளையும் வெட்டிப் பலியிடுகின்றார்கள். இக்கொடிய செயலை அவர்கள் அறவே டுமாறு செய்து, சிவம் அல்லது திருமால் என்னும் ஒரு தெய்வத்தையே வணங்கும்படிச் செய்தல் வேண்டும்.

முற்காலத்தில் தமிழர்கள் திருக்கோயிலில் உள்ள திருவுருவங்களைத் தாமே தொட்டு நீராட்டிப் பூவிட்டு அகில் புகைத்துச் சூடங் கொளுத்தி வழிபட்டு வந்தார்கள். ஞ் ஞான்றும் வடநாட்டிலுள்ளவர்கள் அங்குள்ள திருக்கோயில் களில் தாமே திருவுருவங்களைத் தொட்டு வழிபாடு ஆற்றுதலை நேரே பார்க்கலாம்.

கோயில்களில் வழிபாடாற்றுங் குருக்கள்மார் தமிழ் மொழி யிற் பயிற்சி யுடையராயும், சைவ சித்தாந்தம் நன்குணர்ந்தவ ராயும், தேவார திருவாசகம் ஓதுபவராயும் இருக்கும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும்.

திருக்கோயில்களிற் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றும் காலங்களில், இச் செந்தமிழ் மந்திரங்களே கூறற்பாலனவாம். வை கூறி வழிபாடு ஆற்றின், இவற்றை ஓதுவார்க்கும், அருகிலிருந்து கேட்பார்க்கும் சிவபிரான்மாட்டு மெய்யன்பு நிகழும். இவற்றை விடுத்து ஓதுவோர்க்கும் கேட்போர்க்கும் பெரும்பாலும் பொருள் தெரியாத பிறமொழிச் சொற்றொடர் களை மந்திரங்கள் ஆக்கிப் புகலுதல் கரும்பிருக்க அதனை விடுத்து வேம்பு நுகர்ந்து எய்த்தலோடு ஒக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/305&oldid=1592671" இலிருந்து மீள்விக்கப்பட்டது