உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம் 1. பண்டை நாகரிக மக்கள்

இந்நிலவுலகம் எங்கணும் இருந்து உயிர்வாழ்ந்து வருகின்ற பலவேறு மக்கட்கூட்டத்தாரிற், பண்டைக்காலந் தொட்டு நாகரிகம் உடையராய் வாழ்ந்து வருவோர் மிகச் சிலரேயாவர். அச்சிலராவார்; எகுபதியர், பாபிலோனியர், சாலடியர், அசீரியர், யூதர், சீனர், பாரசிகர், ஆரியர், தமிழர், மெக்சிகர், பரூவியர் என்பவரே யாவர். இவருள் எகுபதியர், பாபிலோனியர், சாலடியர், ஆசீரியர், யூதர் என்னும் ஐம்பெருங்கூட்டத்தாரும் இவ்இந்திய நாட்டுக்குப் புறம்பே மேற்கெல்லையில் உள்ள நாடுகளில் இருந்தோர் ஆவர்; சீனர் பாரசிகர் ஆரியர் என்பார் இவ் இந்திய நாட்டுக்கு வடக்கிலுள்ள மேருமலைப் பக்கத்திலிருந்து தெற்கும் மேற்குங் கிழுக்குஞ் சென்று ஆங்காங்குக் குடிபுகுந்து வைகினோராவர்; தமிழர் என்பார் வடக்கே இமயமலையிலிருந்து தெற்கே கடலில் அமிழ்ந்திப் போன குமரி நாட்டின் எல்லை முடிய இருந்தோர் ஆவர்; மெக்சிகர் பெரூவியர் என்பார் நடு அமெரிக்காவிலும் அதற்குச் சிறிது தெற்கேயுள்ள நாடுகளிலும் இருந்தோர் ஆவர். இப்பலவேறு மக்கட்கூட்டத்தாரின் நாகரிக வாழ்க்கை யெல்லாம் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னமே நடைபெற்றன ஆகும். இவர்தம் வாழ்க்கையின் வரலாறுகளை நாம் உள்ளபடி உணரல் வேண்டுமாயின், இவர்கள் பண்டை நாளிலே கட்டிவைத்த குவிந்த கோபுரங்களும், நிலத்தின்கீழ்ப் புதைந்த அரண்மனைகளும், அவற்றின் சுவர்களிலுங் களிமண் பலகைகளிலும் பொறித்துவைத்த அரசர் வரலாறுகளும், அவர்கள் இயற்றிவைத்த நூல்களுமே ம அதற்குக் கருவியாயிருந்து உதவுகின்றன. இவற்றின் உதவி கொண்டு இப்பண்டை மக்களின் நாகரிக வரலாறுகளை நாம் ஆராய்ந்து பார்க்குங்காற், சீனர் பாரசிகர் ஆரியர் என்னும் மூன்று

D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/44&oldid=1591991" இலிருந்து மீள்விக்கப்பட்டது