உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K

12

மறைமலையம் - 30

வகுப்பாரைத் தவிர மற்றையோரின் நாகரிக வாழ்க்கை ஏறக்குறைய ஒத்த நிலையினதாய்க் காணப்படுகின்றது.

எகுபதியர், பாபிலோனியர், சாலடியர், அசீரியர், யூதர் என்னும் மேனாட்டு நாகரிக மக்கள் வகுப்பினரில் எகுபதியரின் நாகரிகவாழ்க்கையே, ஏனை எல்லார்தம் நாகரிக வாழ்க்கையினும் மிக்க பழைமையுஞ் சிறப்பும் உடையதாக நுவலப் படுகின்றது. இற்றைக்கு எண்ணாயிர ஆண்டுகட்கு முன்னமே இவ் எகுபதியர் அரசியற் றுறையிலும், ஒப்புரவு வாழ்க்கையிலும், சமய உணர்ச்சியிலும், நாடு நகரங்கள் அமைப்பதிலுந், திருக்கோயில்கள் கட்டுவதிலும், ஏனை நாகரிக மக்களெல்லாருங் கண்டு திகைக்கத்தக்க அத்தனை திறமையும் அறிவும் செல்வமும் படைத்திருந்தனர் என அவர்தம் நாகரிக வரலாற்றினை நன்கு ஆராய்ந்துணர்ந்த ஒர் ஆசிரியர் பிரக்சு பே (Brugsch Bey) பகர்கின்றனர். இங்ஙனம் எண்ணாயிர ஆண்டு கட்கு முன்னமே நாகரிக வாழ்க்கையில் தலைசிறந்து நின்றவராகச் சொல்லப்படுதற்கு ஏற்ற மெய்ச்சான்றுகள் வாய்த்த பண்டை நாகரிக மக்கள் எகுபதியரைத் தவிர வேறெவருமில்லை யென்பதே வரலாற்று நூலாசிரியர்களின் (Der - el Bahri) என்னும் ஊரின்கண் உள்ள அஷ்தாப் (Hashto) அரசியின் கோயிற் சுவர்களிற் பொறிக்கப்பட்டிருக்கும் ஓவிய எழுத்துக் கல்வெட்டுக்களில் இவ்எகுபதியர் தென்கடலகத்துக் குமரிநாட்டிலிருந்த பாண்டி (Punt) தேயத்திலிருந்து சென்று நீலயாற்றங்கரைக்கட் குடியேறினர்” என்பது விளக்கமாகச் சால்லப் பட்டிருக்கின்றது. இச் சிறந்த பழங் கல்வெட்டுச் சான்று கொண்டும், இங்ஙனமே, சாலடி நாட்டின்கண் அகழ்ந்து கண்ட சாலப்பெரிய அரண்மனைகள் கோயில்களிற் கிடைத்த களிமண் பலகைகளிற் பொறிக்கப்பட்டுள்ள வரலாறு களாற் புலனாகுந் தமிழ்ப்பெயர்கள் கொண்டும், அவற்றோடு உடனகழ்ந்து எடுக்கப்பட்ட தமிழ்நாட்டுத் தேக்குமரத் துண்டங்கள் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன் சாலடியரது ஊர் என்னுந் தலைநகரிற் கட்டப்பட்ட அவ்வரண்மனைகளிற் காணப்பட்ட மை கொண்டும்,2

Æ

D

F

66

£

1

இற்றைக்கு மூவாயிர ஆண்டுகளின் முன் இயற்றப்பட்ட விலியநூற் பகுதியில் ‘மயிற்றோகை’, ‘அகில்' முதலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/45&oldid=1591993" இலிருந்து மீள்விக்கப்பட்டது