உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

13

செந்தமிழ்ச் சொற்கள் காணப்படுதல் கொண்டும்' ஆரிய மொழி இருக்குவேதத்தும் பழந்தமிழ்மொழித் தொல் காப்பியத்துங் காணப்படுங் குறிப்புகள் கொண்டும் நம் பண்டைத் தமிழ் மக்கள் இற்றைக்குப் பத்தாயிர ஆண்டுகளின் முன்னரேயே நாகரிக வாழ்க்கையில் தலைசிறந்து நின்றார் களென்பதும், அத்தமிழ் மக்களின் வழித்தோன்றிச் சாலடி, எகுபதி முதலான மேனாடுகட்குச் சென்று ஆங்காங்குத் தமது நாகரிக வாழ்வினை நாட்டிய தமிழ்வழி மக்களே சாலடியரும் எகுபதியரும் அவர்க்கு இனமான ஏனை மேனாட்டு மக்களும் ஆவரென்பதும் நன்கறியப்படும்.

னி, நடு அமெரிக்காவிலுந் தென் அமெரிக்காவிலும் ஏழாயிர ஆண்டுகட்குமுன் உயிர்வாழ்ந்த மக்களுந் தமிழ் நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு வேண்டுஞ் சான்றுகள் புலனாய் வருகின்றன." இங்ஙனந் தமிழ்நாட்டிலிருந்த மக்களின் வழித்தோன்றல்களாகவோ, அல்லதவரோடும் அவர் தம் வாழ்க்கையோடுந் தொடர்புடையராகவோ காணப்படும் இப்பண்டை மக்களின் நாகரிக வாழ்க்கையின் வரலாறுகள் அத்தனையுஞ் சிறிதேறக்குறைய ஒத்த தன்மையவாய் இருத்தல் பெரிதும் வியக்கற்பால தொன்றாம்.

1.

அடிக்குறிப்புகள்

See. H. Olcott's Lecture on 'India : Past, Present. and Future', and Prof. G. Rawlinson's Ancient Egypt, P.181.

2.

See. Z.A. Ragozin's Vedic India, pp. 305 - 307

3.

4.

Dr. Caldwell's A Comparative Grammar of the Dradivan Languages, pp. 88 - 89

See Prof. Konrod Haebler's article in Harmsworths History of the world, form p. 56 - 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/46&oldid=1591995" இலிருந்து மீள்விக்கப்பட்டது