உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

2. நாகரிகம்

.

நாகரிகமானது அகமும் புறமுள்ள இருதன்மைப் படும். அவற்றுள் அகநாகரிகமானது ‘அன்பு' என்னும் நெகிழ்ந்த இயற்கையினை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வது. மற்றுப், புறநாகரிகமோ 'செல்வம்' என்னும் வன்பொருளினை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வது. அகத்தே நடைபெறும் அன்பொழுக்கம் மேன்மேல் உரம் பெற்று வளர்தற்குப், புறத்தேயுள்ள செல்வம் உதவிசெய்யும் முறையில் ஒழுகும்

மக்களிடத்தே தான், அகநாகரிகமும் புறநாகரிகமும் ன்றோடொன்று மாறு

கொள்ளாதாய் ஒருங்கொத்து, அம்மக்களுக்கு இம்மை மறுமை இன்பங்களை நிரம்ப ஊட்டி, அவர் தம்மை மங்காநிலையிற் பொங்க வைக்கும். அவ்வாறு அகவொழுக்கமான அன்பு வளர்ச்சிக்குத் துணைபுரியாமல், உயிரினைப் புனிதப்படுத்தும் அன்பு சென்றவழியே தான் செல்லாமல், எல்லா நிலைகளினும் மேம்பட்ட நிலைக்கண் வைகும் அன்புக்குத் தான் அடங்கி நடவாமல், தான் பெருகுதற்கு அன்பினை ஒரு துணையாகப் பயன்படுத்தித், தான் முன்செல்லுஞ் செலவுக்கு அன்பினைப் பின்செல்ல வைத்து, அன்பு நிற்றற்கு உரிய உயர்நிலையில் தன்னை ஏற்றிவைத்துத் தான் நிற்றற்குரிய கீழ்நிலையில் அன்பை இறக்கி வைத்துப், புறநாகரிகப் பொருளாகிய செல்வமானது தன்னை மறந்து கூத்தாடுமாயின், அங்ஙனம் அது கூத்தாடுதற்கு இடங் கொடுக்கும் மக்களிடைய அகநாகரிமும் புறநாகரிகமும் ஒன்றினொன்று முரணி, அவர்தம் இம்மை யின்பங்களையும் பெறவோட்டாமல் அவர்க்குப் பெருந்துன்பங்களை மலை போற் பெருக்கிச், சில நூற்றாண்டுகளில் அவர்தம்மை இருந்த இடமுந் தெரியாமல் மறையவைக்கும். முன்நிற்கவேண்டிய அன்பு பின்நிற்கவும், பின்நிற்கவேண்டிய செல்வம் முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/47&oldid=1591997" இலிருந்து மீள்விக்கப்பட்டது