உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

15

நிற்கவும் முறை மாறினமையா லன்றோ தமிழ் மக்களோ டொத்த பழம் பெருஞ் சிறப்பினையுடைய எகுபதியர், பாபிலோனியர், சாலடியர், அசீரியர், ஆரியர், மெக்சிகர், பெரூவியர் முதலான மக்கட்பிரிவினர் அடியோடு மாய்ந்து போயதோடு, அவர் வழங்கிய மொழிகளும், அவர் வகுத்த எழுநிலைமாட நகரங்களும் ஒருங்கே அழிந்தொழிந்தன! அவரெல்லாம் அவ்வாறொழியவுந், தமிழ்மக்கள் மட்டும் அன்று தொட்டு இன்றுகாறும், அவ் வுயர்நிலையினின்று சிறிது சிறிது வழுவினும், முற்றும் அற்றொழியாது, ஏறக்குறையத் தமது பண்டைச் சிறப்பின்கண் நிலைபெற்ற சான்றோர் சிலரை யாயினும் இன்னும் உடையராய் உயிர்பிழைத்து நிற்கின்றனர்; அவர் வழங்கிய தமிழ்மொழியும் அம்மொழியில் இயற்றப் பட்ட அரும்பெரு நூல்களும் ஏனைப் பண்டை மொழிகளைப் போல், அம்மொழி நூல்களைப் போல் இறவாது வரவர உயிர்ப்பேறி உலவிவருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/48&oldid=1591999" இலிருந்து மீள்விக்கப்பட்டது